கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்

பகுதி 11

✵பாடம் 01 – 09

சரீரத்தின் சுதந்திரத்தைத் துஷ்பிரயோகித்தலுடன் இடைபடுதல்

குறிக்கோள்: நம் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பதையும், நாம் இந்தச் சரீரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நம் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதையும் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: தேவன் நம் சரீரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். நம் சரீரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நமக்கு உரிமை உண்டு, ஆனால் இந்த உரிமையை நாம் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, அல்லது நாம் எந்தவொன்றின் சக்தியின் கீழ் வரவும்கூடாது. நாம் நம் சரீரத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், நாம் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கக்கூடாது. நம் சரீரம் கர்த்தருக்காக இருக்கிறது, மேலும் நம்முள் இருக்கும் கர்த்தர் நம் சரீரத்திற்காக இருக்கிறார். நாம் கர்த்தருடன் ஒரே ஆவியாய் இணைக்கப்பட்டிருக்கிறோம். நம் தூய்மையாக்கப்பட்ட சரீரம் உட்பட நம் முழு ஆள்தத்துவமும் கிறிஸ்துவின் ஓர் அவயவமாகிறது. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் என்னும் ஒரு விலைக்கிரயம் செலுத்தி, நாம் விலைக்கு வாங்கப்பட்டிருப்பதால், நாம் நம் சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.

பின்புலம்: நாம் வாழும் இந்த யுகம் காமவெறியை (சிற்றின்பத்தை) ஊக்குவித்து, மாம்சீக ஆசையின் இச்சாபோகத்தை இளமையின் இலக்காக முன்வைக்கிறது. அத்தகைய ஒரு சமுதாயத்தில், கர்த்தருடைய குறிக்கோளுக்காக இளம் வாலிபர்களைப் பாதுகாத்தலுக்கு ஒரு வலுவான தடுப்பூசிபோடும் வார்த்தை தேவைப்படுகிறது.

அதிகாரங்கள்: 1 கொரிந்தியர் 6–7.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

I. உணவுகளிலும் சரீரத்திலும் நம் சுதந்திரத்தை ஆளும் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன—1 கொரி. 6:12-20

நாம் உயிருடன் இருக்கும் வரை, நாம் நம் பௌதிக சரீரங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். நம் சரீரங்களுக்கு அவற்றின் அடிப்படைத் தேவைகள் உள்ளன. நாம் இந்தத் தேவைகளை மறுக்கக் கூடாது. சில மதரீதியான மக்கள் புசித்தலையும் திருமணத்தையும் தடை செய்கிறார்கள். எனினும், உணவு என்பது மனிதன் பிழைத்திருப்பதற்காகவும், திருமணம் என்பது மனிதனின் இனப்பெருக்கத்துக்காகவும் உள்ளன. அவை இரண்டும் அவசியமானவை அதோடு தேவனால் நியமிக்கப்பட்டவை. “மனிதனுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கான உரிமை இருக்கிறது. எனினும், அவன் அவற்றைத் துஷ்பிரயோகிக்கக் கூடாது, அல்லது அவன் அவற்றால் கட்டுப்படுத்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, அவற்றின் வல்லமையின்கீழ் (சக்தியின்கீழ்) இருக்கவும் கூடாது. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவற்றைப் புசித்தல் போன்ற துஷ்பிரயோகத்துக்குரிய புசித்தல், பலவீனமான சகோதரர்களை இடறச்செய்கிறது (8 9-13, 10:28-30, 33), அதீத புசித்தல் நம் சரீரத்தைச் சேதப்படுத்துகிறது. உணவுகள், நம் வயிறு ஆகிய இரண்டுமே ஒழித்துக்கட்டப்படும்; தேவன் இவ்விரண்டையும் ஒன்றுமற்றதாக ஆக்குவார் (6:13).   உடலுறவின் துஷ்பிரயோகமே வேசித்தனமாகும். இது தேவனால் ஆக்கினைத்தீர்க்கப்படுவது மட்டுமல்லாமல்; இது கர்த்தருக்கான நம் சரீரத்தையும் அழிக்கிறது (வ. 18)” (​Life-study of 1 Corinthians​, Message 38, p. 337). நம் பௌதிகத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில், நாம் இரண்டு கோட்பாடுகளால் ஆளப்பட வேண்டும்: நாம் தேவனுடைய பொருளாட்சியை கண்ணோட்டத்தில் வைத்திருக்க வேண்டும், மேலும் சாத்தானுக்கு நம்மில் எந்தத் தளமும் இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்துவுக்கும் சபைக்கும் எது இலாபகரமானது என்பதை நாம் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் நாம் எந்தவொன்றின் வல்லமையின் (சக்தியின்) கீழும் கொண்டுவரப்படக்கூடாது.

A. எல்லாம் சட்டப்படியானதே, ஆனாலும் எல்லாம் தேவனுடைய பொருளாட்சிக்கு இலாபகரமானவை அல்ல— 1 கொரி. 6:12

நாம் ஒழுக்கக்கேடான எதையும் செய்யாத வரையில் நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாம் நினைக்கக்கூடும். எனினும், நம் வாழ்க்கை வெறுமனே ஒழுக்கநெறியால் ஆளப்படக்கூடாது, மாறாக இன்னும் அதிகமாக தேவனுடைய பொருளாட்சியால் ஆளப்பட வேண்டும். வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு ஒழுக்கநெறிமிக்கதாக இருந்தும்கூட, தேவனுடைய பொருளாட்சிக்கு இலாபகரமானதாக இல்லாத பல விஷயங்களை நாம் செய்யலாம். எடுத்துக்ககாட்டாக, கொஞ்சம் உடற்பயிற்சியைப் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் பங்கேற்பதில் ஒன்றும் தவறில்லை என்று நீங்கள் உணரக்கூடும். எனினும், இந்த அணியில் உள்ள சுற்றுச்சூழல் முறையற்றது அல்லது இந்த விளையாட்டு உங்கள் இருதயத்தைக்  கர்த்தரிடமிருந்து வழிவிலக்கி எடுத்துச் செல்கிறது என்பதையும் நீங்கள் காணலாம். இந்தச் சங்கதியில், பங்கேற்பது என்பது தேவனுடைய பொருளாட்சிக்கு இலாபகரமானது அல்ல. இது போன்ற ஒரு காரியத்தைப் பற்றி நாம் கர்த்தரிடமோ அல்லது நம் பெற்றோரிடமோ நாமே வாதிடுவதை நாம் காணலாம். நாம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நாம் பார்க்கக்கூடும், ஆனால் நாம் கர்த்தருடைய பிரசன்னத்தை இழக்கிறோம். நாம் விரும்பியதை நாம் செய்ய முடிந்தும்கூட, நாம் பிற்பாடு ஜெபிக்க இயலாமல் போகக்கூடும். கடந்த காலத்தில், சிலர் தாங்கள் சரியாகதான் இருந்ததாக வற்புறுத்தியிருந்தனர், ஆனால் அவர்கள் தேவனுடைய பொருளாட்சியைப் பற்றிய தரிசனத்திலிருந்து திசைதிருப்பப்பட்டதால், அவர்கள் தாங்கள் ஒரு காலத்தில் நேசித்த கர்த்தரையும் சபை வாழ்க்கையையும் விட்டு விலகினார்கள். பல விஷயங்கள் சட்டத்திற்கு உட்பட்டவை என்றாலும், தேவனுடைய பொருளாட்சியின் முன்னேற்றத்திற்கு எல்லாமே இலாபகரமானது அல்ல என்பதை நாம் உணர்ந்தறிவோமாக. அவருடைய பொருளாட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம்செய்யத் தயாராக இருப்பவர்களாக நாம் இருப்போமாக.

B. நாம் எந்தவொன்றின் வல்லமையின் (சக்தியின்) கீழ் கொண்டுவரப்படவும்கூடாது—1 கொரி. 6:12

“எல்லாக் காரியங்களும் பவுலின் அதிகாரத்தின்கீழ் இருந்தன, ஆனால் அவன் எதன் அதிகாரத்தின்கீழும் கொண்டுவரப்படமாட்டான்…, எல்லாக் காரியங்களும் அவனுக்கு அனுமதிக்கப்படத்தக்கதாக, ஏற்கதக்கதாக, சட்டப்பூர்வமானதாக இருந்தன, ஆனால் அவன் எதனாலும் ஆளுகைசெய்யப்படவோ (எதற்கும் அடிமைப்படவோ), எதனுடைய அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டிகீழ் கொண்டுவரப்படவோ மாட்டான்…” (1 Corinthians 6:12, footnote 4). ஒரு குறிப்பிட்ட விஷயத்தை விட்டுவிடுவதில் நமக்குச் சிக்கல் இருந்தால், ஏதோவொன்று தவறாக உள்ளது என்பது நமக்குத் தெரியும். நாம் அதன் வல்லமையின் (சக்தியின்) கீழ் இருந்தால், நாம் கர்த்தருக்கு முன்பாக அதனுடன் இடைபட வேண்டும். “ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்யலாமா வேண்டாமா என்பதை நீங்கள் பரிசீலிக்கும் போது, நீங்கள் அந்த விஷயத்தின் வல்லமை அல்லது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறீர்களா என்று நீங்கள் கேட்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட விஷயம் உங்களைக் கட்டுப்படுத்தினால் அல்லது அதற்கு உங்கள் மீது வல்லமை இருந்தால், நீங்கள் அதைச் செய்யக்கூடாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட வேண்டுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அந்த உணவுகளை சாப்பிடுவது சரியாக இருக்கலாம், ஆனால் அவை உங்கள் மீது எந்த வல்லமையையும் கொண்டிருக்கக்கூடாது. நம் மீது வல்லமை கொண்ட எந்தவொன்றோடும் நாம் முழுவதும் இடைபட்டாக வேண்டும் ” (Life-study of 1 Corinthians​, Message 38, p. 340). ஒரு குக்கீ (பிஸ்கோத்) சாப்பிடுவதில் இயல்பிலேயே தவறு ஒன்றும் இல்லை. எனினும், நீங்கள் கண்டிப்பாக ஒரு குக்கீ (பிஸ்கோத்) சாப்பிட்டாக வேண்டும் அல்லது நீங்கள் எந்நேரமும் அதைச் சாப்பிட ஏங்குகின்றீர்கள் என்பதை நீங்கள் கண்டுபிடித்தால், ஏதோ தவறு உள்ளது. அந்த குக்கீ (பிஸ்கோத்) உங்களை அதன் வல்லமையில் கொண்டுள்ளது! இன்று பல இளம் வாலிபர்கள் தொலைக்காட்சி, திரைப்படங்கள், இசை, கிசுகிசுக்கள், டேட்டிங் மற்றும் பிற விஷயங்களின் வல்லமையின் (சக்தியின்) கீழ் உள்ளனர். போதை தரும் பொருட்களுடன் நமக்கு ஒருபோதும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்று சொல்லத் தேவையில்லை. சிகரெட்கள், மது, போதைப்பொருட்கள் ஆகியவை மிக விரைவாக ஒரு நபரின் கட்டுப்பாட்டைப் பெற்று, கர்த்தருக்காக சிருஷ்டிக்கப்பட்ட இந்தச் சரீரத்தை இறுதியில் அழித்துவிடும்.

II. நம் சரீரம் கர்த்தருக்காக இருக்கிறது, கர்த்தர் நம் சரீரத்திற்காக இருக்கிறார்— 1 கொரி. 6:13

நம் பௌதிக சரீரத்தைப் பொறுத்தவரை, நாம் இரண்டு அத்தியந்தங்களில் இருக்க முடியும். ஒருபுறம், நாம் நம் சரீரத்தை அளவுக்கு அதிகமாக நேசிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, நாம் நம் ஆடை அணிதல், உடலைக் கட்டமைத்தல் அல்லது நம் தலைமுடியை ஒழுங்கமைத்தலால் பீடிக்கப்பட்டு, மற்றவர்களின் போற்றுதலுக்காக நம் சரீரத்தை மேம்படுத்துவதில் அதிக நேரம் செலவிடக்கூடும். இன்றைய சமுதாயம் மிதமிஞ்சிய விதத்தில் மேலோட்டமானது; வெளித்தோற்றம் (இமேஜ்) தான் எல்லாமே என்று மக்கள் கருதுகிறார்கள். பல இளம் வாலிப ஆண்களும் பெண்களும் தேவையில்லாத கவனத்தை ஈர்க்கும் வகையில் உடை அணிகின்றனர். இது எவ்வளவு மேலோட்டமானது! மறுபுறம், நாம் நம் சரீரத்தைத் தவறாக நடத்துவதில் மிதமிஞ்சியவர்களாக இருக்கக்கூடும். பல்வேறு காரணங்களுக்காக, நாம் நம் சரீரத்தைக் கவனித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு நமக்குநாமே சாக்குப்போக்குகளைக் கூறக்கூடும். இந்த இரண்டு அத்தியந்தங்களையும் தவிர்க்க, நம் சரீரம் கர்த்தரால் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகிறது என்பதையும், நம் சரீரம் நமக்காக அல்ல, மாறாக கர்த்தருக்காக இருக்கிறது என்பதையும் நாம் தெளிவாகப் பார்த்தாக வேண்டும். நாம் நம் சரீரத்தைக் கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். தேவனுடைய பொருளாட்சியின் நிமித்தம் நம் சரீரத்தைக் கவனித்துக்கொள்வதற்காக நாம் நம் தோற்றத்தைக் கவனித்துக்கொள்ளவும், ஆரோக்கியமான உணவை உண்ணவும், சரியாகத் தூங்கவும், உடற்பயிற்சி செய்யவும் வேண்டும். பின்வரும் குறிப்புகள், நம் சரீரத்தைப் பற்றிய தேவனுடைய பார்வையை நமக்குத் தருகின்றன.

A. தேவன் நம் சரீரத்தை நிகழ்காலத்தில் கவனித்துக்கொள்கிறார், எதிர்காலத்தில் அதை எழுப்புவார்—1 கொரி. 6:14; ரோ. 8:11

கர்த்தர் தற்போதைய யுகத்தில் நம் சரீரத்தைக் கவனித்துக்கொள்கிறார், மேலும் அவருடைய குறிக்கோளுக்காக நாம் ஒரு நீண்ட ஆயுளைப் பெற விரும்புகிறார். “வசனங்கள் 13 மற்றும் 14 இல் நமக்கு ஓர் இரட்டை வாக்குத்தத்தம் உள்ளது: முதலாவது, கர்த்தர் சரீரத்திற்காக இருக்கிறார் என்பதும்; இரண்டாவதாக, தேவன் இந்தச் சரீரத்தை எழுப்புவார் என்பதுமே. இன்றும் கூட நம் சாவுக்கேதுவான சரீரம் உயிர்த்தெழுதல் ஜீவனின் நிரப்பீட்டைப் பெற்று, அதன்மூலம். தாங்கி ஆதரிக்கப்பட முடியும் என்பதை ரோமர் 8:11 இல் இருந்து நாம் அறிகிறோம். சில நேரங்களில் அவர் நம்மை குணப்படுத்துகிறார். நம் சரீரத்தைப் பற்றிய இரட்டை வாக்குத்தத்தத்தின் முதல் அம்சம் என்னவெனில், கர்த்தர் அதற்காக இருக்கிறார், அதைத் தாங்குகிறார் என்பதே….இந்த இரட்டை வாக்குத்தத்தத்தின் முதல் அம்சம் நிகழ்காலத்திற்கானது என்றாலும், இரண்டாவது அம்சம் எதிர்காலத்திற்கானது. கர்த்தர் இன்று நம் சரீரத்திற்காக இருக்கிறார், ஆனால் தேவன் நம் சரீரத்தை எதிர்காலத்தில் எழுப்புவார். இந்தச் சரீரத்தை எழுப்புவது, அதன் உருமாற்றத்தைக் குறிக்கிறது. நம் சரீரம் உயிர்த்தெழுப்பப்படும் போது, அது உருமாற்றம் அடையும்” (Life-study of 1 Corinthians, Message 38, p. 342). தேவன் நம் சரீரத்தை சிருஷ்டித்தார், அவர் நம் சரீரத்தைக் கவனித்துக்கொள்கிறார், மேலும் ஒரு மகிமையான சரீரமாக இருக்கும்படி அதை அவர் உருமாற்றுவார். நம் சரீரம் தேவனுடைய பொருளாட்சிக்கு மிகவும் முக்கியமானது. நாம் எப்போதும் நம் சரீரத்தை மிக உயர்வாக மதிப்பீடுசெய்து, அதை நேர்த்தியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நாம் ஒரு சிறிய விஷயத்தைச் சாப்பிடுவதைப் பரிசீலிக்கக்கூடும், ஆனால் நம் ஆரோக்கியம் என்பது நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்ததே ஆகும். அளவுக்கு அதிகப்படியாகச் சாப்பிடுவதன் மூலமோ அல்லது முறையற்ற விதத்தில் (ஜங்க் ஃபுட்) சாப்பிடுவதன் மூலமோ, நாம் நம் சரீரத்தைக் காயப்படுத்தக்கூடும் அல்லது சேதப்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட  வெளித்தோற்றத்தை (உருவத்தை, இமேஜை) தக்கவைத்துக் கொள்வதற்காக நாம் நம்மையே பட்டினிக் கிடக்கச் செய்யவும்கூடும் அல்லது நாம் உண்ணும் உணவைப் பற்றி அதிகம் விரும்பலாம் குறிப்பிட்ட வகையான ஒரு சில உணவுகளை மட்டுமே உண்ணக்கூடும். அதற்குப் பதிலாக, நாம் ஒரு நீண்ட ஆயுளைப் பெறவும், கர்த்தரை அவருடைய குறிக்கோளுக்காகச் சேவிக்க இயலவும் கூடுமாறு, நாம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

B. நம் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்கள்—1 கொரி. 6:15-18

நம் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்கள். நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியும், நம் மறுசாயலாக்கப்பட்ட ஆத்துமாவும் கிறிஸ்துவின் பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், நம் சரீரமும் கூட ஜீவாதார ரீதியில் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டுள்ளது. “நாம் கிறிஸ்துவுடன் ஜீவாதாரமாக இணைக்கப்பட்டிருப்பதாலும் (வ. 17), கிறிஸ்து நம் ஆவியில் குடியிருந்து (2 தீமோ. 4:22), தம் வீட்டை நம் இருதயத்தில் அமைப்பதாலும் (எபே. 3:17), நம் தூய்மையாக்கப்பட்ட சரீரம் உட்பட நம் முழு ஆள்தத்துவமும் அவருடைய அவயவமாகிறது. எனவே, இத்தகைய உறுப்பினர்த்துவத்தில் பங்குபெறுவதற்கு, நாம் நம் சரீரத்தை அவருக்கு ஏறெடுக்க வேண்டும் (ரோ. 12:1, 4-5)” (1 Corinthians 6:15, footnote 1). பாடத்தில் இந்தக் கட்டத்தில், கர்த்தருடைய குறிக்கோளுக்காக தங்கள் சரீரங்களை வேசித்தனத்திலிருந்து காத்துக்கொள்வது குறித்து இளம் வாலிபர்களிடம் ஒரு தெளிவிக்கும் வார்த்தையைப் பேசுவது அருமையானதாக இருக்கக்கூடும். கிறிஸ்துவின் அவயவங்களாகிய நாம் ஓர் ஒழுக்கக்கேடான நபருடன் ஒருபோதும் நம் சரீரங்களை இணைக்கக்கூடாது (1 கொரி. 6:15). தேவனால் நியமிக்கப்பட்டபடியே திருமணத்தை நாம் கனப்படுத்தியாக வேண்டும் (எபி. 13:4) தேவனுடைய கோட்பாடு, ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் (ஒருத்திக்கு ஒருவன்) என்பதே. இந்தக் கோட்பாட்டை மீறும் எதுவும் வேசித்தனமே, இது தேவனால் முற்றிலும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கக்கப்படுகிறது. இன்று நம் சமுதாயம் தேவனுடைய தரத்தை நிராகரித்திருக்கிறது, ஆனால் இது ஒரு மிகத் தீவிரமான காரியம் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். 1 கொரிந்தியர் 6:18, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்….[வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” என்று கூறுகிறது. தேவன் வேசித்தனத்தை வெறுக்கிறார்.

“மனிதன் தேவனை வெளிக்காட்டுவதற்காக உண்டாக்கப்பட்டான் (ஆதி. 1:26). இந்தக் குறிக்கோளைப் பொருத்தவரை, வேசித்தனத்தைவிட வேறெதுவும் மனிதனை அதிகமாகக் கெடுப்பதில்லை” (1 Thessalonians 4:3, footnote 2). ஒரு வேசித்தனக்காரனாக இருந்த கொரிந்துவில் உள்ள சகோதரன், அவனுடைய மாம்சத்தின் அழிவுக்காக சாத்தானிடம் ஒப்படைக்கப்படவும்கூட பவுல் ஜெபித்தான் (1 கொரி. 5:5). வேசித்தனத்தின் மீதான தேவனுடைய நியாயந்தீர்ப்பு எவ்வளளவு கடுமையானது (1 கொரி. 5:11; எபே. 5:5): இதைப் பற்றி நாம் விவாதிக்கக் கூடாது. “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று வேதாகமம் நமக்குக் கட்டளையிடுகிறது (1 கொரி. 6:18).

கர்த்தர் எதிர்காலத்தில் நமக்காக ஓர் அற்புதமான திருமணத்தை ஆயத்தப்படுத்தியிருக்கிறார், ஆனால் தேவனுடைய ஆளும் கோட்பாட்டை மீறுவதன் மூலம், நாம் தேவன் ஆயத்தப்படுத்தியிர்ருப்பதைச் சேதப்படுத்தலாம். பௌதிக வேசித்தனம் இல்லாத போதிலும்கூட, பாலியத்துக்குரிய டேட்டிங் என்பது வேசித்தனத்தின் கோட்பாட்டில் உள்ளது, ஏனெனில் அது தேவனின் ஆளும் கோட்பாட்டை மீறுகிறது. பாலியத்துக்குரிய டேட்டிங் (உலகப்பிரகாரமான பார்வையின்படி) திருமணத்தைப் பற்றிய ஒரு பார்வை இல்லாமல் அல்லது திருமணத்திற்கு ஒப்படைக்கத் (கம்மிட் ஆகுவதற்கு) தயாராக இருக்காமல் எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஓர் உறவை ஏற்படுத்த முயல்கின்றது. இவ்வாறு, இது திருமணத்திற்கு வெளியே உள்ள ஓர் உறவு. மேலும், டேட்டிங் என்பது வேசித்தனத்தின் கோட்பாட்டில் உள்ளது, ஏனெனில் அது மக்களின் இச்சைகளுக்கு உகந்ததாக ஈர்க்கிறது. ஓர் இச்சைநிறைந்த எண்ணத்தைக் கொண்டிருக்காமல் நீங்கள் ஒரு டேட்டிற்கு வெளியே புறப்பட்டுச் செல்ல முடியுமா? எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் இருக்கும்படி தேவனால்-கொடுக்கப்பட்ட ஓர் ஆசை நமக்கு இருக்கிறது, ஆனால் இச்சையின் மூலமாக மனிதனைச் சேதப்படுத்தும்படி சாத்தான் இந்த ஆசையை அபகரித்திருக்கிறான். டேட்டிங் செய்வதன் மூலம் இந்த உணர்வுகளை “பொம்மையாக்கி வைத்து விளையாடக்” கூடாது, மாறாக அதற்குப் பதிலாக, தேவன் எதற்காக நம்மை ஆயத்தம்செய்திருக்கிறாரோ, அதற்காக நம்மையே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” (1 கொரி. 6:18).

பலர் டேட்டிங் மற்றும் பிற முறையற்ற உறவுகளுக்குத் தங்களையே மிகவும் சுதந்திரமாக வழங்குவதற்கு ஒரு முக்கிய காரணம், கர்த்தரில் தங்கள் நம்பிக்கையை வைப்பவர்களுக்குக் கர்த்தர் அதி சிறந்த நபரை ஆயத்தம்செய்கிறார் என்று அவர்கள் உணர்ந்தறிவதில்லை என்பதே. பாய் ஃபிரண்ட்ஸ் அல்லது கர்ல் ஃபிரண்ட்ஸ் தேடுவதை ஊக்குவிக்கும் வாழ்க்கை முறை, நம் மீது அக்கறைக்கொள்ளும் தேவன் ஒருவர் இல்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள், சோதனை மற்றும் பிழை என்னும் வழிமுறை மூலம் தங்கள் துணையைத் தாங்களே கண்டுபிடிக்கும் வேலையைத் தாங்கள்தான் செய்ய வேண்டும் என்று உணர்கிறார்கள். என்னே ஒரு படுபயங்கரமான தவறு! கர்த்தர் நமக்காக ஓர் அற்புதமான திருமண துணையை தயார் செய்துள்ளார். ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் (ஒருத்திக்கு ஒருவன்), ஓர் ஆணுக்கு ஒரு பெண் (ஒருவனுக்கு ஒருத்தி) என்ற இந்த ஆளும் கோட்பாட்டை நாம் பொருட்படுத்தாவிட்டால், தேவன் நமக்காக ஆயத்தம் செய்துள்ளதை நாம் பறிகொடுக்கலாம். இன்று டேட்டிங் செய்யும் மக்கள் பலர் இறுதியில் விவாகரத்தில் போய் முடிவடைவார்கள், ஏனெனில் அவர்கள் தேவனின் ஆளும் கோட்பாட்டுக்கு அக்கறைப்படுவதில்லை. நாம் ஒரு நேர்த்தியான திருமணத்திற்காக நம்மையே தக்கவைத்துக் கொள்ள வேண்டும், மேலும் சாத்தான் நம்மை சேதப்படுத்தவும், கர்த்தருக்கான நம் எதிர்கால பயனுள்ளத்தன்மையைப் பாழாக்கவும், நம் எதிர்கால திருமணத்தைப் பாழாக்கவும் எந்த வாய்ப்பையும் நாம் அனுமதிக்கக்கூடாது. இளம் வாலிபர்கள் தங்கள் கல்வியை முடிக்கவும், முழுநேர பயிற்சிக்கு வரவும், தங்கள் திருமணத்திற்கான தேவனுடைய காலத்-திட்டமிடுதல் மற்றும் தேவனுடைய ஏற்பாட்டிற்காக காத்திருக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தவும். அவர் ஒரு நபரை உண்மையுடன் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார், இப்படி இந்த நபருக்காகக் காத்திருப்பது பலனுள்ளது.

C. நம் சரீரம் பரிசுத்த ஆவியின் ஓர் ஆலயம்—1 கொரி. 6:19

“பரிசுத்த ஆவி நம் ஆவியில் இருக்கிறார் (ரோ. 8:16), நம் ஆவி நம் சரீரத்திற்குள் உள்ளது. எனவே, நம் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக, வசிப்பிடமாக ஆகிறது” (​Life-study of 1 Corinthians​, Message 39, p. 346). பரிசுத்த ஆவி எங்கே என்று நாம் சில சமயங்களில் யோசிக்கலாம். பரிசுத்த ஆவியானவர் நம் ஆவியுடன் இருக்கிறார், நம் சரீரத்தில் குடியிருக்கிறார். நம் சரீரம் இருக்கும் இடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நாம் எங்கு சென்றாலும், நாம் பரிசுத்த ஆவியைக் கொண்டு செல்கிறோம். நாம் வீட்டில் இருந்தாலும் சரி, சபைக் கூட்டத்தில் இருந்தாலும் சரி, பள்ளியில் இருந்தாலும் சரி, அல்லது நண்பர்களிடையே இருந்தாலும் சரி, பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார். நம் சரீரமே அவருடைய குடியிருப்பு. எனவே, அவர் செல்ல விரும்பாத ஓர் இடத்திற்கு நாம் அவருடைய ஆலயத்தை எடுத்துச் செல்லக்கூடாது. அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும் எதையும் நாம் நம் சரீரத்தால் செய்யக்கூடாது. அவரைக் கனவீனப்படுத்தும் வகையில் நாம் நம் சரீரத்திற்கு ஏதாவது செய்யவோ அல்லது அவ்வாறு அதை அலங்கரிக்கவோ செய்யவும் கூடாது.

D. நாம் நம் சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்துமாறு, கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் என்னும் ஒரு விலைக்கிரயம் செலுத்தி தேவன் நம்மை விலைக்கு வாங்கினார்—1 கொரி. 6:20

பாவத்தின் காரணமாக, தேவனுடைய நீதியான நியாயப்பிரமாணத்தின் கீழ் நமக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; ஆனால், நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொள்வதற்காக, கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் என்னும் ஒரு விலைக்கிரயத்தை தேவன் செலுத்தினார் (கலா. 3:13). எனவே, நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நம் சரீரத்தின் மீது தேவனுக்கு உரிமை உண்டு. நம் சரீரம் அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம் சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்துவதென்றால், “விசேஷமாக, 6:13—11:1வரையுள்ள இந்தப் பகுதியின் இடஅமைப்பின்படி, புசித்தல், திருமணம் என்ற இவ்விரண்டு காரியங்களில், தேவன் நம் சரீரத்தை ஆக்கிரமித்துப் பூரிதமாக்கவும், தம் ஆலயமாகிய நம் சரீரத்தின்மூலம், அவர் தம்மையே வெளிக்காட்டவும் நம்மில் குடியிருக்கிற தேவனை (1 யோ. 4:13) அனுமதிப்பதாகும். இதற்காக நாம் நம் சரீரத்தின்மீது ஒரு கடுமையான மற்றும் கண்டிப்பான கட்டுப்பாட்டைப் பிரயோகித்து, அதைப் பணிந்தடங்குதலுக்குள் கொண்டுவரவும் (9:27), ஒரு ஜீவிக்கும் பலியாக அதை தேவனுக்கு ஏறெடுக்கவும் வேண்டும் (ரோ. 12:1)” (1 Corinthians 6:20, footnote 2).

III. நாம் கிறிஸ்துவை நம் சரீரத்தின் மூலமாக வெளிக்காட்ட நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும்—1 கொரி. 6:17

கிறிஸ்துவை நம் சரீரத்தில் வெளிக்காட்டுவதற்கான திறவுகோல், நம் மனித ஆவியே ஆகும். ஒரே ஆவியில் நாம் கர்த்தருடன் இணைந்திருக்கிறோம் (1 கொரி. 6:17). நம் ஆவியிலிருந்து கிறிஸ்து நம் சாவுக்கேதுவான சரீரங்களுக்கு ஜீவனை உட்பகிர்கிறார் (ரோ. 8:11), இதனால் நாம் அவரை மகிமைப்படுத்தக்கூடும் (1 கொரி. 6:20). நம் சரீரத்தை, குறிப்பாக உணவு மற்றும் பாலுறவு தொடர்பான விஷயங்களில் நம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க, நம் ஆவியைப் பயிற்சிசெய்ய நாம் கற்றாக வேண்டும். நாம் வாழும் இந்த யுகம் இதற்கு முற்றிலும் எதிரானது, ஆனால் நாம் இந்த யுகத்திற்காக இல்லை; நாம் கர்த்தருக்காகவும், அவருடைய குறிக்கோளுக்காகவும் இங்கு இருக்கிறோம்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாகிய நம் அனைவருக்குமே நம் இருத்தலுக்கு (பிழைப்புக்கு) இன்றியமையாத தேவைகள் உள்ளன, அதாவது உண்பதற்கான ஒரு தேவையும், உடைக்கான ஓரு தேவையும், இன்பத்திற்கான ஒரு தேவையும், ஒரு நாள் திருமணம் செய்து கொள்வதற்கான ஒரு தேவையும் உள்ளது. இந்தத் தேவைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வைக் கொண்டிருப்பதிலும், நமக்கான தேவனுடைய வழங்கீடு (ஏற்பாடு) மற்றும் நியமனத்தின்படி அவை பூர்த்திசெய்யப்படுவதிலும் ஒன்றும் தவறில்லை. எனினும், தேவனுடைய சத்துருவாகிய சாத்தானிடம் மனுக்குலத்திற்கு எதிரான ஒரு குறிப்பிட்ட தந்திரம் இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த ஆசைகளை நிறைவேற்றுவதன் ஆவலாய்ப் பின்தொடர்தல் தேவனுக்கான ஓர் இடமாற்றமாகி, இவ்வாறு அவன் தன் சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்ற தேவனுடைய குறிக்கோளிலிருந்து மனிதனை திசைதிருப்பும் அளவிற்கு, சாத்தான் மனிதனை அடிமைப்படுத்தவும், இந்த ஆசைகளின் வல்லமையின் கீழ் அவனை உட்படுத்தவும் சாத்தான் உள்ளே வருகிறான். இளம் வாலிபர்கள் தாங்கள் சாத்தானின் இந்தச் சதித்திட்டத்திற்கு விரைவில் இரையாகிவிடலாம் என்பதை உணர்ந்தறிய வேண்டும். தேவன் தங்களுக்காக தங்கள் மனித வாழ்க்கையில் நியமித்துள்ள ஏதோவொன்றின் வல்லமையின் கீழ் எவ்வாறு தாங்கள் கொண்டு வரப்பட முடியும் என்று உயர்நிலைபள்ளி மாணவர்களிடம் கேளுங்கள். அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் அல்லது என்ன சாப்பிடுகிறார்கள் என்பது ஓர் உருப்படியாக இருக்கக்கூடும். இன்று இளம் வாலிபர்கள் பலர் போஷாக்கிற்காக அல்ல, மாறாக வெறும் ருசிக்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சிலர் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை உண்பதில் “இணந்துவிட்டார்கள்” அல்லது தங்களுக்குப் பிடித்த நொறுக்குத் தீனி (ஜங் ஃபுட்) இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. திருமணம் என்பது இன்னோர் எடுத்துக்காட்டு ஆகும். தேவன் தம் தேர்ந்தெடுப்புக்குரிய (தமக்கு விருப்பமான) நபருடன் சரியான நேரத்தில் உள்ள வருவார் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, பல இளம் வாலிபர்கள் முன்கூட்டியே முதிர்ச்சியின்றி வெளியே புறப்பட்டுச் சென்று, ஒரு திருமண துணையைத் தேடுகிறார்கள் அல்லது இன்னும் மோசமாக, திருமணம் செய்துகொள்வதற்கான எந்த நோக்கமுமே இல்லாமல் வெறுமனே “டேட்டிங்” மட்டுமே செல்கின்றனர், இது நிச்சயமாக வேசித்தனத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பாதையே (1 கொரி. 6:18). (இந்தக் குறிப்பை கூடுதலாக மேம்படுத்தி விளக்குவதற்கு IB மற்றும் IIB ஐக் குறிப்பிடவும். ஈசாக்கு தேவனில் நம்பிக்கை வைத்திருந்து, தன் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்தபோது, கர்த்தர் ரெபெக்காளை அவனுக்காக எப்படி ஆயத்தப்படுத்தினார் என்ற கதையையும் நீங்கள் பயன்படுத்தலாம்.) (ஆதியாகமத்தின் ஜீவ-ஆய்வு , செய்தி 60 ஐக் காண்க.)

சுவிசேஷ செயலாக்கம்: நாம் எந்த விதத்தில் நம்மையே நடத்த தேர்வுசெய்கிறோமோ (விரும்புகிறோமோ) அதில் நம் சரீரத்தைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்துடன் தேவன் நம்மை சிருஷ்டித்தார். இன்று உலகில், அவிசுவாசிகள் தங்கள் சரீரத்தைப் பயன்படுத்துவதில் தங்கள் சுதந்திரத்தை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள், இறுதியில் அவர்கள் தங்களுக்கு சுதந்திரம் என்று நினைக்கும் விஷயங்களுக்கு தாங்களே அடிமைப்படுத்தப்பட்டு இருப்பதைக் காண்கிறார்கள்: அதாவது உறவுகள், பொருள்ரீதியான செல்வம், அந்தஸ்து, பதவி, தொழில் வளர்ச்சி, ஃபேஷன், பொழுதுபோக்கு, விளையாட்டு, மது, புகையிலை, போதைப்பொருள் போன்றவை. எல்லா அவிசுவாசிகளும் ஏதோவொன்றின் வல்லமையின் கீழ் இருக்கிறார்கள் மற்றும் அதற்கு அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நேரத்தைப் போக்குவதற்கு செய்யும் விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள், மேலும் அவர்கள் உண்மையில் இவற்றின் வல்லமையின் கீழ் இருக்கிறார்கள் அதோடு அவர்கள் இந்த விஷயங்களைச் செய்யாமல் ஒரு நாள் கூட வாழ முடியாத அளவுக்கு இவற்றால் அடிமைப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குக்க் காட்டவும். நாம் உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பதற்கும், எந்தவொன்றின் வல்லமைக்குட்படாமல் இருப்பதற்கும் ஒரே வழி, தேவனுடைய குமாரனாகிய இயேசுவைப் பெறுவதற்கும், அவரை நம் ஆவிக்குள் அனுமதிப்பதற்கும் திறந்துக்கொடுப்பதுதான். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36). மேலும், இவரே, அதாவது நாம் பெற்றுக்கொள்ளும் தேவனுடைய குமாரனாகிய இயேசுவே இந்த ஆவியானவர், மேலும் “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுண்டு” (2 கொரி. 3:17).

மிக முக்கியக் காரியங்கள்: ஒரு நபராக நீங்கள் யார் என்பதைப் பொக்கிஷமாய்க் கருதக் கற்றுக்கொள்ளுதலும், உங்களைச் சேதப்படுத்தக்கூடிய விஷயங்களிலிருந்து உங்களையே பிரித்தெடுத்தலும் (IV.D.); டேட்டிங் மற்றும் திருமணம் பற்றிய ஒரு வேதாகமப்பூர்வமான கண்ணோட்டத்தையும் புரிந்துக்கொள்ளுதலையும் பெறுதல் (IV.D.9.b.); ஆடை மற்றும் தோற்றம் பற்றிய ஒரு வேதாகமப்பூர்வமான கண்ணோட்டத்தையும் புரிந்துக்கொள்ளுதலையும் பெறுதல் (IV.D.9.e.).

BACKGROUND READING: Life-study of 1 Corinthians, Message 38, pp. 339–340, 342; Message 39, p. 346.

REFERENCES: Life-study of 1 Corinthians, Messages 38–40; 1 Corinthians 6:12, footnote 4; 6:15, footnote 1; 6:20, footnote 2; 1 Thessalonians 4:3, footnote 2; Life-study of Genesis, Message 60.