கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்
பகுதி 11
✵பாடம் 01 – 09
மகிமையிலிருந்து மகிமைக்கு
குறிக்கோள்: புதிய உடன்படிக்கை ஊழியத்திற்காகக் கிறிஸ்துவைக் கொண்டு கட்டமைக்கப்படுவதற்கான தங்கள் தேவையை உணர்ந்தறியும்படி இளம்வாலிபர்களுக்கு உதவுவதற்கு.
பொருட்சுருக்கம்: இரண்டு கொரிந்தியர், புதிய உடன்படிக்கை ஊழியம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக ஆகியிருக்கும், கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் அவயவங்கள் அனைவருக்கும், புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இந்தப் புதிய உடன்படிக்கை ஊழியத்தில் ஒரு பங்கு உள்ளது. இந்த ஊழியத்தில் நம் பங்கு, நாம் கிறிஸ்துவைக் கொண்டு எவ்வளவு அதிகமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்கள் கிறிஸ்துவின் கடிதங்களுக்கும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளுக்கும், கிறிஸ்துவை தங்கள் பொக்கிஷமாக உள்ளடக்கிய மண் பாண்டங்களுக்கும் ஒப்பிடப்படுகிறார்கள். நம் அனுபவத்தில், நாம் இந்தப் பொக்கிஷமாகிய கிறிஸ்துவை நம் மண் பாண்டங்களுக்குள்ப் பெறுகிறோம், நாம் அவரை அனுபவித்துமகிழ கண்ணாடிகளாக நாம் அவரைக் கண்டு, பிரதிபலிக்கிறோம், மேலும் நாம் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும், கிறிஸ்துவின் ஜீவிக்கும் கடிதங்களாக ஆகிவிடுகிறோம். இந்த ஊழியத்தில் நம் பங்கையும், செயல்பாட்டையும் அதிகரிக்க, நாம் கிறிஸ்துவைக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும்.
பின்புலம்: இளம் வாலிபர்கள் தாங்கள் கிறிஸ்துவைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் அளவிற்கு, தாங்கள் அவரை ஊழியஞ்செய்யும் திறன் கொண்ட புதிய உடன்படிக்கை ஊழியக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தறிய வேண்டும்.
அதிகாரங்கள்: 2 கொரிந்தியர் 3–4.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
தேவனை சேவிப்பதே, ஒரு மனிதன் தன் ஜீவனைக் கொடுக்க முடியக்கூடிய அதி உயர்ந்த காரியம். எல்லா மனிதர்களும் இதை அங்கீகரிக்கிறார்கள், மேலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட நாம் அனைவரும் அவருக்காக வேலை செய்ய மகிழ்ச்சியுடன் நம்மையே கொடுக்க வேண்டும். தேவனை சேவிக்க நாடுபவர்கள், இரண்டு வழிகளில் ஒன்றில் அவரைச் சேவிக்கிறார்கள்: ஒரு பழைய வழி மற்றும் ஒரு புதிய வழி. பழைய வழியில், தேவன் தம்முடைய வேலைக்காரன் இந்த நியாயப்பிரமாணத்தின் உடன்படிக்கையின்படி தம்மைச் சேவிக்கும்படி கோருகிறார். எனினும், சேவித்தலின் இந்தப் பழைய உடன்படிக்கை வழி, நிரப்பீட்டின் வழங்கீடு இல்லாத கோரிக்கையின் ஒரு வழியாகும். இந்த வழியில் தேவனை சேவிக்க நாடுபவர்கள் தோல்வியடைய மட்டுமே முடிகிறது. எனினும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய உடன்படிக்கையின் மூலமாக ஒரு புதிய வழியை வெளிப்படுத்தினார். இந்தப் புதிய வழியின்படி சேவிப்வர்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாகி, தெய்வீக ஜீவனில் மறுசாயலாக்கப்பட்டு, தங்களுக்குள் உள்வசிக்கும் இந்த ஆவியானவரால் இறுதியில் மகிமைப்படுத்தப்படுகிறார்கள். இதுவும் ஊழியஞ்செய்பவர்களில் மட்டுமல்லாமல், அவர்களின் ஊழியத்தைப் பெறுபவர்களிலும் நடைபெறுகிறது என்பது இரட்டிப்பு அற்புதமே. புதிய உடன்படிக்கையின் கிருபையின் ஊழியம், பழைய உடன்படிக்கையின் நியாயப்பிரமாண ஊழியத்தைவிட எவ்வளவு அதிமேன்மையானது! நாம் கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்கையில், மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் ஓர் ஊழியக்காரராக இருக்க நாம் அவரைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறோம், அதுபோலவே, அவர்களும் இந்தப் புதிய உடன்படிக்கை ஊழியத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றனர்.
I. புதிய உடன்படிக்கையின் ஊழியத்தை முன்னெடுக்கும் ஊழியக்காரர்கள், கிறிஸ்துவைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று இரண்டாம் கொரிந்தியர் வெளிப்படுத்துகிறது—2 கொரி. 3:6
தேவன் தம் நித்திய வாஞ்சையை நிறைவேற்ற, கிறிஸ்துவை மக்களுக்குச் சேவித்துப் பரிமாறும் தகுதியுள்ள ஊழியக்காரர்கள் தேவனுக்குத் தேவை. நாம் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு தேவனுடைய புதிய உடன்படிக்கை ஊழியத்தின் உள்ளடக்கங்களாக ஊழியஞ்செய்ய வேண்டுமானால், நாம் முதலில் அவரைக் கொண்டு கட்டமைக்கப்பட்டாக வேண்டும். வேதாகம அறிவு அல்லது நெறிமுறை போதனையைக் கொண்டு மக்களைச் சேவிப்பது ஒரு நபரின் நடத்தையை மாற்றக்கூடும், ஆனால் அது அந்த நபரை ஒருபோதும் கிறிஸ்துவால் நிரப்பாது. பவுல் தான் ஊழியம்செய்த புதிய உடன்படிக்கை ஊழியத்திற்கு, நியாயப்பிரமாணத்தின் பழைய உடன்படிக்கை ஊழியத்தின் மீது உள்ள அதிமேன்மையை அறிவிக்க தைரியமாக இருந்தான் (2 கொரி. 3:12.) தேவனுடைய புதிய உடன்படிக்கையின் கிருபையின் ஊழியத்தில், மனிதர்கள் தம் வேலையை முன்னெடுக்க கிருபையாகிய இந்தப் பதனிடப்பட்ட தேவன் தம்மையே கொண்டு நிரப்பீடளிக்கப்படுகிறார்கள். மேலும், புதிய உடன்படிக்கையின் ஊழியம் மகிமையை—தேவன் மனுஷீகத்தில் வெளிக்காட்டப்படுவதை விளைவிக்கிறது, இவ்வாறு தேவனுடைய நித்திய குறிக்கோளை நிறைவேற்றுகின்றது. தேவனுடைய நித்திய குறிக்கோள், தம்மை வெளிக்காட்டும் அதோடு தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கூட்ட மக்களைப் பெறுவதே என்பதால், அவருடைய குறிக்கோளை முன்னெடுக்கும் இந்த வேலையில்—அதாவது புதிய உடன்படிக்கை ஊழியத்தில் பங்கேற்க நாம் ஆசைப்பட வேண்டும். (“புதிய ஏற்பாட்டு ஊழியம்” என்றும் அழைக்கப்படும்) தேவனுடைய புதிய உடன்படிக்கை ஊழியத்தை முன்னெடுப்பற்காக நாம் அனைவரும் பவுலைப் போன்று கட்டமைக்கப்பட முடியும். “கிறிஸ்து என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவரிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவர் என்னவெல்லாம் பெற்றிருக்கிறாரோ, என்னவெல்லாம் அடைந்திருக்கிறாரோ, அவையெல்லாவற்றோடும், தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட மக்களின் சாட்சாத்து ஆள்தத்துவத்திற்குள், நாடி நரம்புக்குள் கட்டமைக்கப்பட்டாக வேண்டும். இதுவே ஓர் ஊழியத்தைக் கொண்டிருப்பதற்கான ஒரே வழி” (Life-study of 2 Corinthians, Message 5, p. 36). கிறிஸ்துவை தெய்வீக ஐசுவரியங்களாக மற்ற மனிதர்களுக்குள் பகிர்ந்தளிப்பதை விட உயர்ந்த தொழில் அல்லது சேவை இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அத்தகைய ஊழியக்காரர்களாக நாம், இன்னும் பூமியில் பரவிக்கொண்டிருக்கும் புதிய உடன்படிக்கையின் ஊழியத்தின் வெற்றி பவனியின் (ஊர்வலத்தின்) பகுதியாக இருக்கிறோம் (ஒப். 2 கொரி. 2:14). கிறிஸ்துவைப் பெற்ற ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட ஓர் ஊழியக்காரராக இருக்கத் தகுதியானவர்கள். நம் அனைவருக்கும் பள்ளியில் நம் நண்பர்களுக்கான ஒரு பாரம் இருக்க வேண்டும். நாம் ஊழியஞ்செய்வதைத் துவங்க முழுவதும் கட்டமைக்கப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் ஏற்கனவே கிறிஸ்துவைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பின் கொஞ்சம் அளவைக் கொண்டுள்ளோம். அவரை மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய நாம் இன்றே துவங்கலாம்!
II. புதிய உடன்படிக்கை ஊழியக்காரர்களாகிய நாம் கிறிஸ்துவைக் கொண்டு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறோம் என்பதை உதாரணங்காட்டி விளக்குவதற்கு இரண்டாம் கொரிந்தியர் உருவகங்களைப் பயன்படுத்துகிறது
புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களை சித்தரிக்க 2 கொரிந்தியரில் பவுலால் பயன்படுத்தப்படும் மூன்று உருவகங்களாவன: கிறிஸ்துவின் கடிதங்கள், கர்த்தரைக் கண்டு பிரதிபலிப்பதற்கான கண்ணாடிகள், கிறிஸ்துவை தங்கள் பொக்கிஷமாகக் கொண்ட மண் பாண்டங்கள். இந்த உருவகங்கள் ஒவ்வொன்றும், புதிய உடன்படிக்கை ஊழியத்திற்காக கிறிஸ்துவைக் கொண்டு நாம் கட்டமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உதாரணங்காட்டி விளக்குகிறது. (“உருவகம்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை இளம் வாலிபர்கள் புரிந்துகொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.)
A. நாம் எல்லா மனிதர்களாலும் வாசிக்கப்படுவதற்கான, கிறிஸ்துவின் கடிதங்கள்—2 கொரி. 3:1–3
மையாகிய ஆவியானவரைக் கொண்டு, அப்போஸ்தலர்களால் எழுதப்பட்ட கிறிஸ்துவின் கடிதங்களுடன் விசுவாசிகளைப் பவுல் ஒப்பிடுகிறான். “கிறிஸ்துவை தெரவிக்கவும் வெளிக்காட்டவும் கிறிஸ்துவையே உள்ளடக்கமாகக் கொண்டு எழுதப்படுகிற கிறிஸ்துவின் கடிதம். கிறிஸ்துவின் எல்லா விசுவாசிகளும் கிறிஸ்துவின் இத்தகைய ஜீவிக்கும் கடிதமாக இருக்க வேண்டும், அவர்களின் ஆள்தத்துவங்களில் மற்றவர்கள் கிறிஸ்துவை வாசித்து, அறியமுடிய வேண்டும்” (2 Corinthians 3:3, footnote 1). “இந்த எழுதுதல், ஒரு விசுவாசி கிறிஸ்துவின் ஒரு ஜீவிக்கும் கடிதமாக ஆகுவதற்கு வழிவகுக்கிறது. இத்தகைய ஒரு நபர் தான் கூறுகிற மற்றும் செய்கிற எல்லாவற்றிலும் கிறிஸ்துவை வெளிக்காட்டுகிறான்” (Life-study of 2 Corinthians, Message 6, p. 50). எல்லா சபைக் கூடுகைகள், இளம் வாலிபர்களுக்கான கூடுகைகள், கோடைகால சத்திய பள்ளிகள் மற்றும் இளம் வாலிபர்களுக்கான மாநாடுகள் மூலமாக, கிறிஸ்துவுக்குரிய ஏதோவொன்று நம் இருதயங்களில் பொறிக்கப்படுகின்றது. இது கிறிஸ்துவால் நம்மைக் கட்டமைக்கிறது. கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தாங்களே கடிதங்களாகவும், மற்றவர்களையும் கிறிஸ்துவின் கடிதங்களாக ஆக்குவதற்காக மற்றவர்களுக்குக் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகவும் இருக்கிறார்கள் (2 Corinthians 3:3, footnote 2). உண்மையில், மற்றவர்களுக்குள் ஆவியானவரை மையாக ஊழியம்செய்கிறவர்கள் அதேபோல் தங்களுக்குள்ளும் அதே சாட்சாத்து “கடிதம்” ஊழியம்செய்யப்படுவதை அனுபவிக்கிறார்கள். இவ்வாறு, இந்த ஊழியக்காரர்களும், யாருக்கு ஊழியஞ்செய்யப்படுகிறதோ அவர்களும் ஒரே ஆவிக்குரிய கடிதத்தின் “கார்பன் நகல்களாக” ஆகிவிடுகிறார்கள். இந்தக் “கடிதங்கள்” அனைத்தும் ஒன்றிணைக்கப்படும்போது, அவை தேவன் அடைய நாடும் தலைசிறந்த படைப்பாக உருவாகும் (எபே. 2:10). இந்தக் குறிக்கோளுக்காக, ஆவியானவர் தம்மையே நமக்குள் ஒவ்வொரு வரியாக, நாளுக்கு நாள் பொறித்துக்கொண்டிருக்கிறார்.
B. நாம் கிறிஸ்துவைக் கண்டு பிரதிபலிக்கும் கண்ணாடிகள்— 2 கொரி. 3:15-18
நாம் கர்த்தரைக் கண்டு பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்றும் 2 கொரிந்தியர் 3 இல் பவுல் நமக்குச் சொல்கிறான். புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்கள், கர்த்தரிடம் திருப்பப்பட்ட இருதயங்களைக் கொண்டவர்கள், முக்காடுநீக்கப்பட்ட (திரைநீக்கப்பட்ட) முகங்களை உடையவர்கள், கர்த்தரை ஆவியானவராக அனுபவித்துமகிழ்கிறவர்கள், கர்த்தரைக் கண்டு பிரதிபலிப்பதன் மூலம் மறுசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறவர்கள். மக்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோரும் பழைய உடன்படிக்கை ஊழியத்தைப் போலல்லாமல், புதிய உடன்படிக்கை ஊழியம் மக்களை இந்த ஜீவிக்கும் கிறிஸ்துவிடம் திருப்புகிறது, இதனால் அவர்கள் அவரைக் கண்டு பிரதிபலிப்பதன் மூலம் மறுசாயலாக்கப்படக்கூடும் (2 கொரி. 3:16-18). அப்படியானால், நம்முடைய ஊழியத்தின் ஒரு பெரும் பகுதி, மக்களுக்கு முக்காடிடும் எல்லாவற்றிலிருந்தும் அவர்களைக் கிறிஸ்துவிடம் திருப்புவதே ஆகும்! இளம் வாலிபர்களாகிய நாம் தினமும் காலையில் நம் இருதயங்களை கர்த்தரிடம் திருப்ப பயிற்சிசெய்ய வேண்டும். கர்த்தருடன் தனிமையில் (தனியாக) நேரம் செலவிடுதல், அவருக்குத் திறந்துக்கொடுத்தல், மனந்திரும்புதல், அறிக்கையிடுதல், அவருடைய நாமத்தைக் கூப்பிடுதல், அவருடன் ஐக்கியம்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம், நாம் அவரைக் கண்டு, அவரைப் பிரதிபலிக்க முடியும்.
C. நாம் இந்த மேன்மையான பொக்கிஷமாகிய கிறிஸ்துவை உள்ளடக்கிய மண் பாண்டங்கள்—2 கொரி. 4:7
“நம் இருதயங்களில் தேவனுடைய பிரகாசித்தல், நம் ஜீவனாகவும் நம் எல்லாமாகவும் இருக்கும்படி தேவனுடைய ஊனுருவாகிய மகிமையின் கிறிஸ்து என்ற ஒரு பொக்கிஷத்தை நமக்குள் கொண்டுவருகிறது. ஆனால் இந்தப் பொக்கிஷத்தை உள்ளடக்குகிற நாம், தகுதியற்ற, உடைந்துபோகக் கூடிய மண் பாத்திரங்களாக இருக்கிறோம். ஒரு விலை மதிப்பில்லா பொக்கிஷம் தகுதியற்ற பாத்திரங்களில் உள்ளடக்கப்படுகிறது! இது தகுதியற்ற பாத்திரங்களை விலைமதிப்பில்லா ஊழியத்தைக் கொண்ட புதிய உடன்படிக்கையின் ஊழியர்களாக்கிவிட்டது. இது உயிர்த்தெழுதலில் தெய்வீக வல்லமையால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த வல்லமையின் மேன்மை, நிச்சயமாக தேவனால் ஆனது, நம்மால் ஆனதல்ல” (2 Corinthians 4:7, footnote 1). நாம் கிறிஸ்துவை உள்ளடக்கி பிரகாசிக்க வடிவமைக்கப்பட்ட வெறும் மண் பாண்டங்களே என்பதை நமக்கு நாமே நினைவூட்ட வேண்டும். தேவனுடைய வேலையைச் செய்வதற்கான ஏதேனும் வல்லமை அல்லது மற்றவர்களை கிறிஸ்துவிடம் கவர்ந்திழுக்கும், நம் நபரிலுள்ள ஏதேனும் மேன்மை நமக்கு இருந்தால், அது நம்மில் உள்ள கிறிஸ்துவின் கட்டமைப்பின் காரணமாகவே இருந்தாக வேண்டும். நம் ஆள்தத்துவத்தின் அதி உள்ளான பகுதியில் இத்தகைய ஒரு தெய்வீக நிஜத்தை நாம் உடைமையாய்க் கொண்டிருப்பதால், நாம் கிறிஸ்துவுக்காகப் பேசுவதற்கு தைரியமாக இருக்க முடியும். நாம் கிறிஸ்தவர்கள் என்பதை நம் நண்பர்களிடம் வெறுமனே அறிக்கையிடுவது (ஒப்புக்கொள்வது) கூட, கிறிஸ்து தம்மையே அவர்களுடைய இருதயங்களுக்குள் பிரகாசிப்பதற்கான ஒரு திறப்பைக் கிறிஸ்துவுக்குக் கொடுக்க முடியும்.
D. நம் தனிப்பட்ட பொக்கிஷமாக நாம் அனுபவித்துமகிழும் கிறிஸ்து தம் ஜீவிக்கும் கடிதங்களாகிய நம் மூலமாக எல்லா மனிதர்களாலும் வாசிக்கப்பட்டு அறியப்படும்வரை, அவர் நமக்குள் கட்டமைக்கப்படுவார்
நம் அனுபவத்தில், நாம் முதலில் கிறிஸ்துவை நம் மண் பாண்டங்களுக்குள் இருக்கும் இந்தப் பொக்கிஷமாக அனுபவித்துமகிழ்கிறோம். நம் ஆவியில் அவரைத் தொடர்புகொள்வதன் மூலம் அவரை நமக்குள் இருக்கும் இந்தப் பொக்கிஷமாக நாம் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் மற்றவர்களுக்கு அவரைப் பிரதிபலிக்கவும் செய்கிறோம். இந்த வழியில் நாம் அவரை அனுபவித்துமகிழ்கையில், மகிமையின் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நாம் ஜீவனில் வளர்கிறோம். இதற்கிடையில், ஆவியானவர் நம்மீது எழுதிக்கொண்டும் இருக்கிறார், தம்மால் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களாக நம்மை ஆக்கிக்கொண்டும் இருக்கிறார். நாம் கர்த்தரை அனுபவித்துமகிழும் ஒவ்வொரு முறையும், நாம் “மை” இன் மற்றொரு டோஸ் (அளவைப்) பெறுகிறோம், கர்த்தர் ஒவ்வொரு நாளும் நமக்காக ஏற்பாடுசெய்யும் அனுபவங்களினூடாய் நாம் கடந்துசெல்கையில், கர்த்தர் நம்மீது எழுதுவதற்கு இந்த மையை பயன்படுத்துகிறார். ஒவ்வொரு நாள் காலையிலும் கிறிஸ்து தம்மையே நம் இருதயத்தில் பொறிப்பதற்கு (பதிக்க) அவரை நாம் அனுமதித்தால், மற்றவர்கள் கிறிஸ்துவை அறிவார்கள், அதாவது நாம் கூறுகிறவற்றின் காரணமாக மட்டுமல்லாமல், நாம் யாராக இருக்கிறோம் என்பதாலும் கூட அறிவார்கள். ஒவ்வொரு நாளும் முதல் காரியமாகக் கர்த்தரிடம் திரும்புவது எவ்வளவு முக்கியம் என்பதை அத்தகைய ஓர் எடுத்துக்காட்டிலிருந்து ஒருவர் உணர்ந்தறிய முடிகிறது. எனினும், அப்படிப்பட்ட ஒரு விதத்தில் நாம் அவரை அனுபவித்துமகிழவில்லை எனில், கர்த்தர் நம்மீது எழுதுவதற்கான மையாக இந்த ஆவியானவரை நாம் பெறமாட்டோம், மேலும் அந்த நாள் எழுதுவதற்கான எந்த “மை”யும் இல்லாத ஒரு “வறண்ட” நாளாக இருக்கும். மற்றவர்கள் கிறிஸ்துவின் கிருபையையும், இரக்கத்தையும், மகிமையையும் புதிய உடன்படிக்கையின் உள்ளடக்கங்களாக தங்கள் புலனால் அறியக்கூடுமாறு மற்றவர்கள் வாசிக்கும்படியாக நாம் கிறிஸ்துவின் ஓர் ஐசுவரியமான தொகுப்பாக ஆகிவிடக்கூடுமாறு, ஒரு நாள் முழுவதும் தெய்வீக எழுதுதலுக்குப் போதுமான இந்த தெய்வீக “மை கிணற்றிலிருந்து” ஒவ்வொரு நாளும் நாம் இந்த விலையேறப்பெற்ற “மையை” மொண்டுகொள்வோமாக. நாம் அத்தகைய நபர்களாக ஆகிவிட்டால், நாம் நிச்சயமாகவே இந்தப் புதிய உடன்படிக்கையின் திறமையான ஊழியக்காரர்களாக இருப்போம்! இது கட்டமைப்பைப் பற்றிய ஒரு காரியம்—நாம் என்ன செய்கிறோம் என்பதை விட நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைப் பற்றிய ஒரு காரியம் ஆகும்.
III. நம் வாழ்க்கையைப் பற்றிய சரியான பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும் மற்றும் புதிய ஏற்பாட்டு ஊழியத்துடன் கட்டமைக்கப்பட முயற்சி செய்ய வேண்டும்— 1 தீமோ. 4:15-16).
A. கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக இருக்க வாஞ்சிப்பவர்களாக, கிறிஸ்துவுக்காக ஒரு நீண்ட ஆயுளை வாழ்வதற்கான ஒரு கண்ணோட்டத்துடன் நமக்கு நாமே அக்கறைப்பட்டாக வேண்டும்—1 கொரி. 6:19-20; 2 தீமோ. 4:5
கிறிஸ்துவின் ஓர் ஊழியக்காரனாகக் கட்டமைக்கப்படுவது என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு வழிமுறையாகும். எதிர்காலத்தில் நம் பயனுள்ளத்தன்மை, கிறிஸ்து நமக்குள் எவ்வளவு கட்டமைக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் பொறுத்தது என்று நாம் உணர்ந்தறிய வேண்டும். கட்டமைக்கப்படாத ஒரு நாள், தேவனுடைய பார்வையில் ஒரு வீணடிக்கப்பட்ட நாளாகும். நாம் நம் இளம் வயதுக்குரிய வருடங்களை எப்படி செலவிட்டோம் என்று வருத்தப்பட (மனஸ்தாபப்பட()நாம் விரும்புவதில்லை, அல்லது நாம் முட்டாள்தனமான விருப்பத்தேர்வுகள் காரணமாக நம் வாழ்க்கையின் ஆயுசுநாளை குறைத்துக்கொள்ளவும் விரும்புவதில்லை. இதற்கு நம் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நீண்ட காலக் கண்ணோட்டம் நமக்கு இருக்க வேண்டும் என்பதை நம்மிடம் கோருகிறது. இன்று பலர் தற்போதைக்கு வாழ்கிறார்கள் மற்றும் ஒரு குறுகிய கால கண்ணோட்டத்தை மட்டுமே கொண்டுள்ளனர். அவர்கள் ஏசாவைப் போன்றவர்கள், இவன் பசியாக உணர்ந்ததால், ஒரு சிறிய கிண்ணம் சூப்புக்காக தன் முழு பிறப்புரிமையையும் விற்றுப்போட்டான். கர்த்தரால் அதிகம் பயன்படுத்தப்பட்டவர்கள், தங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதன் அதோடு கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தேடுவதன் மதிப்பை உணர்ந்தவர்கள். இந்த யுகத்தின் தேவனான சாத்தான் (2 கொரி. 4:4), பொக்கிஷமாகிய கிறிஸ்து என்ற நிஜத்தைக் குறித்து மக்களைக் குருடாக்குகின்றான். இளம் வாலிபர்கள் இந்த நீண்டகால கண்ணோட்டத்தை விட்டுவிட்டு, தங்கள் வாழ்க்கையின் அதிசிறந்த பகுதியை வீணடிப்பதை மட்டுமே அவன் விரும்புவான். “சகோதரர் நீ எங்களிடம் இவ்வாறு சொல்வதுண்டு, கர்த்தர் தம்மால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒருவரைப் ஆதாயப்படுத்துவதற்கு பல ஆண்டுகள் ஆவதால், நாம் நம் ஆரோக்கியத்தை ஒரு நேர்த்தியான முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும். ஓர் அற்ப-ஆயுசு சாவைத் தவிர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். நாம் உண்மையிலேயே ஆவிக்குரியவர்களாக இருந்தால், ஒரு நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு நம் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை நாம் கற்றுக்கொள்வோம்.
வளர்ச்சியடைந்து, மூவொரு தேவனால் கட்டமைக்கப்படுவதற்கு ஒரு சில வருடங்களுக்கும் மேலாகிறது. இத்தனை ஆண்டுகளாக பல விஷயங்களினூடாய்க் கடந்து வந்திருக்கிறவன் என்ற முறையில் என்னால் சாட்சிபகிர முடிவது என்னவெனில், இந்தக் கட்டமைப்பு முதிர்ச்சி அடையும் முன் ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் அறுபது வயதாவது இருக்க வேண்டும் என்பதே. எனினும், அறுபது வயதிற்குள் இது ஒரு நபரில் நடைபெறுவதற்கு, அவன் இருபது வயதுக்கு முன்பே இரட்சிக்கப்பட வேண்டும்….நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகளில், நாம் குறிப்பிட்ட சில காரியங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் நாம் ஜீவன்-தரும் ஆவியானவரால் கட்டமைக்கப்படுவதற்கு நமக்கு இன்னும் இருபது ஆண்டுகள் தேவை. புதிய உடன்படிக்கையின் ஓர் ஊழியக்காரனாகக் கட்டமைக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் பற்றிய இந்த வார்த்தையை இளம் வாலிபர்கள் கேட்கும்போது, அவர்கள் ஏமாற்றமடையக்கூடும். இளம் வாலிபர்களே, விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இருபது வருடங்களும், கட்டமைக்கப்படுவதற்கு இன்னும் இருபது வருடங்களும் ஆகலாம் என்ற உண்மையால் சோர்வடைய வேண்டாம் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நம் மனித ஜீவனுக்குள் கட்டமைக்கப்பட்ட தெய்வீக ஜீவனாகிய இந்த உயர்ந்த ஜீவனுடன் நாம் இடைபடுகின்றோம். கண்டிப்பாக இதற்குக் கால அவகாசம் தேவை. இயற்கையான மனித ஜீவனில் கூட, ஒரு மனிதன் நாற்பது வயதிற்குள் போதுமான அளவு முதிர்ச்சியடைவதில்லை. இது, ஜீவன் வளர காலம் தேவை என்ற உண்மைக்கு ஓர் உதாரணம் ஆகும்” (Life-study of 2 Corinthians, Message 5, p. 37).
B. நம் இளமைப் பருவத்தில், நாம் புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் சத்தியத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட முடியும்—2 தீமோ. 2:15; 3:16
சத்தியத்தைக் கொண்டு கட்டமைக்கப்படுவதற்காக வேதாகமத்தையும், ஊழியப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்குவதற்கான அதிசிறந்த நேரம், நாம் இளமையாக இருக்கும்போதே. (சேவிப்பவர்கள் வழிநடத்தப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் தங்கள் பாடப் புத்தகத்தின் தொடக்கத்தில் ஊழிய வாசிப்பு அட்டவணையை இளம் வாலிபர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
C. புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் விளைவு நித்திய மகிமையே—2 கொரி. 3:11
நாம் மற்றவர்களுக்குள் கிறிஸ்துவுக்குரிய எதை ஊழியம்செய்தாலும்சரி, அது கர்த்தருக்காக நாம் செய்யும் நம் சேவைக்கு ஒரு நித்திய மரபுரிமையாக இருக்கும், ஏனெனில் நாம் ஊழியம்செய்யும் கிறிஸ்துவுக்குரிய ஒவ்வொரு “டோஸும்” ஒரு நித்திய வைப்புத்தொகையாக ஆகிவிடுகிறது! வேறு எந்த தொழிலும் அதுதான் இத்தகைய ஒரு விளைவைத் தருவிப்பதாக பெருமைப் பாராட்ட முடியுமா? கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் மட்டுமே தாங்கள் செய்வது நித்திய மகிமையை விளைவிக்கிறது என்று கூற முடிகிறது. நம் தேவனுடைய நித்திய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக கிறிஸ்துவை ஊழியம்செய்யும் இப்படிப்பட்ட ஊழியக்காரர்களாக நாம் அனைவரும் இருக்கக்கூடும் என்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள்!
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: 2 கொரிந்தியர் 3:18 இன் படி, விசுவாசிகள் அனைவரும் மகிமையின் கர்த்தரைக் கண்டு பிரதிபலிப்பதற்கான கண்ணாடிகள். நீங்கள் ஒரு கண்ணாடி என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்தறிந்திருக்கிறீர்களா? (இந்தச் செயலாக்கத்துடன் இளம் வாலிபர்களுக்கு ஒரு கண்கூடான காட்சி உதவியை வழங்க ஓர் உண்மையான கண்ணாடியை வைத்திருப்பது நல்லது.) இருபத்தி நான்கு மணி நேரமும் நாம் எதையாவது பார்த்துக்கொண்டும், பிரதிபலித்துக்கொண்டும் இருக்கிறோம். ஓர் உயர்நிலைப்பள்ளி மாணவனாக, நீங்கள் எதைக் கண்டு பிரதிபலிக்கின்றீர்கள்? நாம் நம் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும், ஏனெனில் நாம் எதைப் பார்க்கிறோமோ அதையே நாம் பிரதிபலிப்போம். ஓர் எதிர்மறையான எடுத்துக்காட்டாக, இன்று உலகில் சில இளம் வாலிபர்களின் அதிகரித்துவரும் வன்முறை (ஆக்ரோஷமான) நடத்தை, அவர்கள் பார்த்துக்கொண்டு வந்திருப்பதன்—அதாவது திரைப்படங்கள், வீடியோ கேம்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் உள்ள வன்முறையின் ஒரு பிரதிபலிப்பாகும். சில சமயங்களில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் மனச்சாட்சி புண்படுத்தப்பட்டு “மேகமூட்டமாக” ஆகியிருப்பதால், சில சமயங்களில் அவர்களுக்கு கர்த்தரைப் பார்ப்பதிலும் பிரதிபலிப்பதிலும் சிரமம் இருக்கக்கூடும். கர்த்தர் தங்கள் மனச்சாட்சி மூலமாகப் பிரகாசிக்க முடியுமாறு, அவர்கள் தாங்கள் ஒரு தெளிவான மனச்சாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தறிய வேண்டும். அவர்கள் கர்த்தரை அவருடைய வார்த்தையிலும், அறிக்கையிடுதலுடன் கூடிய ஜெபத்தின் மூலமாகவும் பார்க்க ஒவ்வொரு நாளும் நேரத்தைச் செலவிட அவர்கள் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அப்போது பள்ளியில் உள்ள அவர்களது நண்பர்களும், அவர்களது குடும்பத்தினரும் கர்த்தர் அவர்கள் மூலமாகப் பிரகாசிப்பதைக் காண்பார்கள். “இயேசுவின் மீது உங்கள் கண்களைத் திருப்புங்கள், / அவருடைய அற்புதமான முகத்தை முழுவதுமாகப் பாருங்கள், / அப்போது பூமியின் விஷயங்கள் விசித்திரமாக மங்கிவிட தொடங்கும், / அவருடைய மகிமை மற்றும் கிருபையின் ஒளியினிலே” (Hymns, #645).
சுவிசேஷ செயலாக்கம்: ஒவ்வொரு மனிதனும் ஒரு பாத்திரமே (ரோ. 9:21). கேள்வி என்னவெனில், நாம் எதை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறோம்? என்பதே. நாளுக்கு நாள் நீங்கள் திருப்தி அடைவதற்கான பல விஷயங்களைக் கொண்டு உங்களை நிரப்ப முயற்சிக்கிறீர்கள், ஆனால் எதுவுமே பயனளிப்பதில்லை. நீங்கள் முயற்சிக்கும் எண்ணற்ற பல விஷயங்கள் தற்காலிக நிறைவை அளிக்கலாம்: கல்வி அல்லது தத்துவம் போன்ற நல்ல அறிவார்ந்த விஷயங்கள், விளையாட்டு போன்ற உடல்ரீதியான செயல்பாடுகள், வெற்றிகளை அடைதல், பொழுதுபோக்கு, அல்லது திருட்டு அல்லது ஏமாற்றுதல் போன்ற பாவமான விஷயங்களும் கூட இதை அளிக்கக்கூடும். நீங்கள் எவ்வளவு அதிகமாக மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறீர்களோ அதோடு நீங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கான விஷயங்களைக் கண்டறிகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்குள் உள்ள வெற்றிடமானது பெரிதாக ஆகிவிடுகிறது, மேலும் அவ்வளவு அதிகமான இந்த விஷயங்களை நீங்கள் ஆசையாய்ப் பின்தொடர வேண்டும் (ஒப். யோவான் 4:13-18). இரவில் படுக்கையில் இருக்கும் போது, உறங்கச் செல்வதற்கு முன், ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகும்கூட உங்களுக்குள் இன்னும் ஒரு வெறுமை இருக்கிறது. நீங்கள் எந்த உள்ளடக்கத்திற்காக உண்டாக்கப்பட்டீர்களோ அது உங்களிடம் இல்லாததால், இத்தகைய ஓர் உணர்வு இருக்கிறது. ஒரு கையுறை ஒரு கையை உள்ளடக்குவதற்காக உண்டாக்கப்பட்டது போலவே, நீங்களும் உங்கள் மண் பாண்டத்தில் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை—கிறிஸ்துவின் அற்புதமான நபரை உள்ளடக்குவதற்காக உண்டாக்கப்பட்டீர்கள் (2 கொரி. 4:7).
மிக முக்கியக் காரியங்கள்: தேவனுடைய பொருளாட்சியின் இலக்கு, தேவனை மனிதனோடும், மனிதனை தேவனோடும் கலந்திணைப்பதே என்பதை அறிதல் (II.A.4.); மனிதனுக்கு ஒரு முழு இரட்சிப்பு தேவை என்பதையும், தேவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் இந்த முழுமையான இரட்சிப்புக்கு மனிதனின் ஒரு நீண்ட கால ஒத்துழைப்பு தேவை என்பதையும் புரிந்துக்கொள்ளுதல் (II.B.3.); கர்த்தருடன் ஒரு நிலையான தனிப்பட்ட நேரத்தைச் செலவிடுதல் (III.E.2.). ஊழியத்தை வாசித்தல் (III.E.8.).
BACKGROUND READING: Life-study of 2 Corinthians, Message 5; Message 19, p. 173.
REFERENCES: 2 Corinthians 3:3, footnotes 1–2; 3:16, footnote 1; 3:18, footnotes 3, 5; 4:7, footnote 1; Life-study of 2 Corinthians, Messages 5, 6, 19, 23–25, 30.