கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்
பகுதி 11
✵பாடம் 01 – 09
கர்த்தருடைய பந்தியின் உட்கருத்து
குறிக்கோள்: கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுவதன் உட்கருத்தைப் புரிந்துகொள்வதற்கு.
பொருட்சுருக்கம்: நாம் கர்த்தரை அனுபவித்துமகிழ்ந்து நினைவுகூரும்படி கர்த்தர் தம் பந்தியை நிறுவினார். நாம் கவனக்குறைவாக அல்லது ஒழுங்கற்ற முறையில் இந்தப் பந்தியில் பங்குபெறக்கூடாது. நாம் கர்த்தருடைய பந்தியிலும், பேய்களின் பந்தியிலும் பங்குபெற முடியாது. நாம் பந்தியின் உட்கருத்தைப் பாராட்டி, பகுத்துணர்வுடன் புசித்தாக வேண்டும், நாம் பங்குபெற வரும்போது நம்மை நாமே பரிசோதித்தாகவும் வேண்டும். நாம் ஓர் அலட்சியமான விதத்தில் பந்தியில் பங்குபெறக்கூடாது. இந்தப் பாடத்தைப் பிரயோகிப்பதில், இது புசித்தல் பற்றிய ஒரு காரியம் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஒன்றைப் புசித்தல் என்பது நம்மை அந்த விஷயத்துடன் ஒன்றாக்குகிறது. நாம் எதைப் புசிக்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பிiன்புலம்: நம் இளம் வாலிபர்களில் பலருக்கு கர்த்தருடைய பந்தியைப் பற்றிய ஓர் அடிப்படை புரிதல் இல்லை. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்தப் பரஸ்பர அனுபவமகிழ்ச்சிக்குள் அவர்கள் நுழைய வேண்டுமானால், அவர்கள் அப்பம் மற்றும் பாத்திரத்தின் மகிமையான சின்னங்களுக்குப் பின்னால் இருக்கும் சத்தியங்களைப் புரிந்துகொண்டாக வேண்டும். கர்த்தருடைய பந்தி என்றால் என்ன, அது எப்படி நடைமுறைக்கு வந்தது, அது எதை அடையாளப்படுத்துகிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பாடம் கர்த்தருடைய பந்திக் கூடுகையின் குறிக்கோளை, அதாவது கர்த்தரை நினைவுகூர்வதை வலியுறுத்துகிறது. இந்தப் பாடம், இந்த விசேஷமான கூடுகையின் தீவிரத்தை (கணத்தை) இளம் வாலிபர்கள் உணர்ந்தறியவும் உதவுகிறது. கர்த்தர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றிய ஓர் ஆழமான பாராட்டுதலை நாம் கொண்டிருந்து, அவருடைய பந்தியின் உட்கருத்தைப் பாராட்டும்போது, நாம் நன்றியுணர்வோடும் பயபக்தியோடும் இந்தக் கூடுகையை அணுகுவோம்.
அதிகாரங்கள்: 1 கொரிந்தியர் 10–11.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
I. கர்த்தருடைய பந்தி, அல்லது கர்த்தருடைய இராப்போஜனம், நாம் கர்த்தரை நினைவுகூரும் ஒரு மிகவும் விசேஷித்த கூடுகையாகும்—1 கொரி. 11:23-26
கர்த்தருடைய நாளில் நாம் கர்த்தரை நினைவுகூருவதற்கான ஒரு விசேஷ கூடுகைக்காக ஒன்றுசேர்ந்து கூடிவருகிறோம். இந்தக் கூடுகையில் நாம் அப்பத்தைப் பிட்டு, ஒரு பாத்திரத்தில் பங்குபெறுகிறோம். இந்த இரண்டு சின்னங்களும் மிகவும் உட்கருத்துவாய்ந்தவை, ஏனெனில் அவை கர்த்தர் நமக்காக நிறைவேற்றியிருப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. (கர்த்தரை நினைவுகூருதலுக்காக கர்த்தருடைய இராப்போஜனத்தை கர்த்தர் எவ்வாறு ஏற்படுத்தினார் என்பதைப் பற்றி 1 கொரிந்தியர் 11:23-26, மத்தேயு 26:26-30, மாற்கு 14:22-26 மற்றும் லூக்கா 22:14-20 இல் தெரிவிக்கப்பட்டுள்ள கதையைச் சொல்ல இங்கே நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.) 1 கொரிந்தியரில், இந்தக் கூடுகை கர்த்தருடைய பந்தி அல்லது கர்த்தருடைய இராப்போஜனம் என்று அழைக்கப்படுகிறது. “கர்த்தருடைய பந்தியின் வலியுறுத்துதல், கர்த்தருடைய இரத்தம் மற்றும் அவரது சரீரத்தின் ஐக்கியத்தின்மீது இருக்கிறது (10:16-17), அதாவது, ஐக்கியத்தில் கர்த்தரில் பங்குபெறுதல்மீது, பரஸ்பரமாகக் கர்த்தரை அனுபவித்துமகிழ்வதின்மீது இருக்கிறது, இப்படியிருக்க, கர்த்தருடைய இராப்போஜனத்தின் வலியுறுத்துதல், கர்த்தரை நினைவுகூர்வதன்மீது இருக்கிறது (வவ. 24-25). கர்த்தருடைய பந்தியில், நாம் நம் அனுபவமகிழ்ச்சிக்காக அவரது சரீரத்தையும் இரத்தத்தையும் பெறுகிறோம்; கர்த்தருடைய இராப்போஜனத்தில், நாம் அவருடைய அனுபமகிழ்ச்சிக்காக நம் நினைவுகூர்தலை அவருக்குத் தருகிறோம்” (1 Corinthians 11:20, footnote 1). கர்த்தருடைய பந்தியிலும், கர்த்தருடைய இராப்போஜனத்திலும் நாம் விக்கிரகாராதனையிலிருந்து நம்மையே பிரித்துக்கொண்டு, நம்மைநாமே சோதித்தறிந்து, சரீரத்தைப் பகுத்துணர (நிதானித்து அறிய) வேண்டும் (1 கொரி. 10:21; 11:20-21).
A. கர்த்தருடைய பந்தியை அனுபவித்துமகிழ, நாம் விக்கிரக ஆராதனையிலிருந்து நம்மைப் பிரித்துக் கொள்ள வேண்டும்— 1 கொரி. 10:21
நம்முடைய நிஜமான ஜீவ நிரப்பீடாகவும், திருப்தியாகவும் கர்த்தரை அனுபவித்துமகிழ நாம் கர்த்தருடைய பந்திக்கு வருகிறோம். நாம் அவரில் பங்குபெறும்போது, நாம் அவருடன் ஒன்றாகிவிடுகிறோம், ஏனெனில் அவரே நம் நிஜமான உணவும் பானமும் ஆவார். “அந்த ஒரே அப்பத்தில் பங்குபெறுவது (அதாவது, புசிப்பது—வவ. 28-30) நம்மை அதனுடன் ஒன்றாக்குகிறது. கிறிஸ்துவில் நாம் பங்குபெறுவது, அதாவது, கிறிஸ்துவை அனுபவிக்கும் நம் அனுபவமகிழ்ச்சி, நம்மை அவருடன் ஒன்றாக்கி, நம்மை அவருடன் ஒன்றித்திணைக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது” (1 Corinthians 10:17, footnote 2). “விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட காரியங்களைப் புசிப்பதும் இதையே செய்கிறது: அது, அந்தப் பலிகளுக்குப் பின்னே இருக்கும் பேய்களுடன், அந்தப் புசிப்பவர்களை ஒன்றித்திணைக்கிறது” (1 Corinthians 10:18, footnote 1). நாம் எதைப் புசித்து, குடிக்கிறோமோ அதனுடன் நாம் ஒன்றாக ஆகிவிடுகிறோம். நாம் கர்த்தரைப் புசித்து குடித்தால், நாம் விக்கிரக ஆராதனையினின்று நம்மை நீங்கலாக்கிக் காத்துக்கொள்வோம். நாம் கர்த்தருடைய பந்தியிலும், பேய்களின் பந்தியிலும்கூட பங்குபெறக்கூடாது. “இந்த நாட்டில் மக்கள் விக்கிரகங்களை ஆராதிங்காமல் இருக்கக்கூடும், ஆனால் அவர்கள் விக்கிரக ஆராதனையைப் பியிற்சிசெய்யக்கூடம். விடுமுறை நாட்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ அவர்கள் பல்வேறு வகையான கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கிற்கு தங்களையே கையளிக்கக்கூடும் (ஈடுபடுத்தக்கூடும்). அவர்கள் சாப்பிட்டு குடித்துவிட்டு எழுந்து விளையாடக்கூடும். இதுவே விக்கிரக ஆராதனை” ” (Life-study of 1 Corinthians, Message 49, p. 441). சேவிப்பவர்கள், இளம்வாலிபர்கள் தங்கள் சனிக்கிழமை இரவுகளை செலவிடும் விதத்தைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்க விரும்பக்கூடும், இது மறுநாள் காலையில் கர்த்தரைத் துய்க்கும் தங்கள் அனுபவமகிழ்ச்சியைப் பாதிக்கக்கூடும். அவர்களுடைய நண்பர்கள் உலக கேளிக்கைகளிலும் பொழுதுபோக்குகளிலும் தங்களை ஈடுபடுத்தி திளைக்கக்கூடும், ஆனால் நாம் கர்த்தரை துய்க்கும் அனுபவமகிழ்ச்சிக்காக நம் இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
B. கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குபெற, நாம் நம்மைநாமே சோதித்தறிந்து, சரீரத்தைப் பகுத்துணர (நிதானித்து அறிய) வேண்டும்—1 கொரி. 11:28-29
கர்த்தருடைய இராப்போஜனத்தின் வலியுறுத்துதல், கர்த்தருடைய திருப்திக்காக கர்த்தரை நினைவுகூருதலே ஆகும். பண்டைய காலத்தில், கொரிந்திய விசுவாசிகள் கர்த்தருடைய இராப்போஜனத்திற்கு முன் ஒன்றுசேர்ந்து இரவு உணவை உண்ணும் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தனர். எனினும், அவர்கள் ஒருவருக்கொருவர் அக்கறைச் செலுத்தாமல் இதைச் செய்தார்கள். செல்வந்தர்களாக இருந்த சிலர் குடித்துவெறித்தனர்; ஏழைகளாக இருந்த சிலர் பசியுடன் பட்டினி கிடந்தனர். இது அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியது. அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களைக் கடிந்துகொண்டு, இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான் என்று அவர்களை எச்சரித்தான் (1 கொரி. 11:27). இன்று சிலர் ஒரு கவனக்குறைவான மற்றும் சுயநலமான முறையில் கர்த்தருடைய பந்திக்கு வருவதும் சாத்தியம்தான். அவர்கள் ஓர் அலட்சியமான (தளர்வான) விதத்தில் உடை உடுத்தக்கூடும், தாமதமாக வரக்கூடும், கூடுகையின் போது பேசக்கூடும் அல்லது கேலிசெய்யக்கூடும் (ந்கைச்சுவை செய்யக்கூடும்). அல்லது, அவர்களுக்கு மற்றவர்களிடம் தீர்க்கப்படாத குற்றங்களோடும், தேவனுக்கு எதிரான பாவங்களோடும் அவர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குபெற வரக்கூடும். நாம் கர்த்தருடைய இராப்போஜனத்திற்குத் பாத்திரமானவர்களாக தங்களைத் தாங்களே சோதித்தறிய, மற்றவர்களிடம் மனந்திரும்பி, நம்முடைய பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு, ஒரு தெளிந்தபுத்தியுள்ள (நிதானமான) மற்றும் மரியாதையுள்ள முறையில் கூடுகைக்கு வருவதன் மூலம் நாம் இவற்றை ஒரு நேர்த்தியான விதத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும். கொரிந்தியர்கள் நாம் கர்த்தருடைய இராப்போஜனத்திற்குத் பாத்திரமானவர்களாக தங்களைத் தாங்களே சோதித்தறியவில்லை, அல்லது அவர்கள் கர்த்தருடைய சரீரத்தைப் பகுத்துணரவும் (நிதானித்து அறியவும்) இல்லை. மற்ற அவயவங்களுக்காக அக்கறைப்படாமல், வெறும் தங்களுக்கான ஒரு போஜனமாக மட்டுமே கர்த்தருடைய இராப்போஜனத்தை அவர்கள் சுயநலத்துடன் நடத்தினர். இதன் காரணமாக, கர்த்தர் அவர்களை ஒழுங்குபடுத்த உள்ளே வந்தார். அவர்களில் சிலர் நோய்வாய்ப்பட்டனர், மேலும் சிலர் மரித்தும்கூட போனார்கள். நாம் கர்த்தருடைய பந்திக்கு வரும்போது, நாம் தெளிந்தபுத்தியுள்ளவர்களாக (நிதானமாக) இருக்க வேண்டும். நாம் நம்மை நாமே சோதித்தறிந்து, பரிசோதிக்க வேண்டும். கர்த்தரையோயோ, ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ நாம் எந்த விதத்திலும் புண்படுத்தியிருந்தால், நாம் அதை உடனடியாக கவனித்துக்கொள்ள வேண்டும். நாம் நமக்குநாமே நியாயத்தீர்ப்பை வருவிக்கும்படி புசித்துக் குடிக்காதவாறு (போஜனபானம்பண்ணாதவாறு), நாம் கர்த்தருடைய இராப்போஜனத்தின் உட்கருத்தைப் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டும் (1 கொரி. 11:29).
B. பந்தியின் மேல் இருக்கும் அப்பமும், பாத்திரமும் ஆவிக்குரிய உட்கருத்துவாய்ந்த சின்னங்கள்—1 கொரி. 10:16
கர்த்தருடைய பந்தி, ஒரு பரஸ்பர அனுபவமகிழ்ச்சியின் நேரமாக இருக்க வேண்டும். அவருடைய பந்தியில் நாம் கர்த்தரை அனுபவித்துமகிழ்கிறோம், கர்த்தரும் நம்மை அனுபவித்துமகிழ்கிறார்; கர்த்தர் அநுபவித்த பாடுகளை நினைவிற்குக் கொண்டுவர நம் மனதைப் பயிற்சி செய்வதன் மூலம் அல்ல, மாறாக அவருடைய பிரசன்னத்தை அனுபவித்துமகிழ்வதன் மூலம் நாம் கர்த்தரை நினைவுகூருகிறோம். “கர்த்தரை நிஜமாக நினைவுகூர்வதென்பது, அப்பத்தைப் புசித்து, பாத்திரத்தில் பருகுவதே ஆகும் (11:26), அதாவது, தம் மீட்கும் மரணத்தின்மூலம் தம்மையே நமக்குத் தந்திருக்கிற கர்த்தரில் பங்குபெற்று, அவரை அனுபவித்துமகிழ்வதாகும். அப்பத்தைப் புசித்து, பாத்திரத்தில் பருகுவதென்றால், மீட்கின்ற கர்த்தரை நம் பங்காக, அதாவது, நம் ஜீவனாகவும் ஆசீர்வாதமாகவும் உட்கொள்வதாகும். இதுவே ஓர் உண்மையான விதத்தில் அவரை நினைவுகூர்வதாகும்” (Life-study of 1 Corinthians, Message 55, p. 490).
A. கர்த்தருடைய பந்தியின் அப்பம், நாம் கர்த்தருடைய ஜீவனில் பங்குகொள்ளக் கூடுமாறு நமக்காகப் பிட்கப்பட்ட (உடைக்கப்பட்ட) கர்த்தருடைய சரீரத்தை அடையாளப்படுத்துகிறது—1 கொரி. 11:23-24
“கர்த்தருடைய பந்தியின் அப்பம், நாம் கர்த்தருடைய ஜீவனில் பங்குகொள்ளக் கூடுமாறு அவரது ஜீவனை விடுவிக்கும்படி சிலுவையில் நமக்காகப் பிட்கப்பட்ட (உடைக்கப்பட்ட) கர்த்தருடைய சரீரத்தை அடையாளப்படுத்துகிற ஒரு சின்னமாகும். இந்த ஜீவனில் பங்குபெறுவதன்மூலம் நாம் கிறிஸ்துவின் பரம்புதிரான சரீரமாகிறோம் (1 கொரி. 12:27), இதுவும் இந்தப் பந்தியின் அப்பத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது (1 கொரி. 10:17). எனவே, இந்த அப்பத்தில் பங்குபெறுவதன்மூலம், நமக்குக் கிறிஸ்துவின் சரீரத்தின் ஐக்கியம் இருக்கிறது (1 கொரி. 10:16)” (Matthew 26:26, footnote 2). “…நாம் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறும்போது, மேஜை மீதுள்ள அப்பம் கிறிஸ்துவின் ஒரே சரீரத்தை அடையாளப்படுத்துகிறதா அல்லது மனிதனின் எந்தப் பிரிவினையை (எந்த ஸ்தாபனத்தை) அடையாளப்படுத்துகிறதா என்பதை நாம் பகுத்துப்பார்க்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் சரீரத்தைப் பகுத்துப்பார்த்து, அந்த அப்பத்தில் எந்தப் பிரிவினையிலோ, அல்லது எந்தப் பிரிவினைவாத ஆவியுடனோ பங்குபெறக் கூடாது. கர்த்தருடைய பந்தியில் நம் பங்குபெறுதல், நடைமுறையில் அல்லது ஆவியில் எந்தப் பிரிவினையும் இன்றி அவரது ஒப்பற்ற சரீரத்தின் ஒப்பற்ற ஐக்கியமாக இருக்க வேண்டும்” (1 Corinthians 11:29, footnote 3). நம் நண்பர்கள் அல்லது பள்ளித் தோழர்கள், ஸ்தாபனங்களில் உள்ள தங்கள் கூடுகைகளில் கலந்துகொள்ளும்படி நம்மை வரவழைக்கும்போது, நாம் அவர்களின் பந்தியில் பங்குபெறக்கூடாது. அத்தகைய பங்கேற்பு, அவர்களின் பிரிவினையுடன் நம்மை ஒன்றித்துக்காட்டுகிறது அதோடு கர்த்தரைப் புண்படுத்துகிறது.
B. கர்த்தருடைய பந்தியின் பாத்திரம், தேவனை நம் பங்காக மீட்டுத்திருப்பியிருக்கும் கிறிஸ்துவின் இரத்தத்தை அடையாளப்படுத்துகிறது—1 கொரி. 11:25; 10:16
“கர்த்தரின் இரத்தம் நம் விழுந்துபோன நிலைமையைவிட்டு நம்மை தேவனிடமும் தேவனின் முழு ஆசீர்வாதத்திடமும் மீண்டுமாய் மீட்டுக்கொண்டுவந்தது. கர்த்தரின் பந்தியைப் பொறுத்தவரை (1 கொரி. 10:21), அப்பம் ஜீவனில் நாம் பங்குபெறுவதையும் பாத்திரம் தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் அனுபவித்துமகிழ்வதையும் அடையாளப்படுத்துகிறது. எனவே, பாத்திரம், “ஆசீர்வாதத்தின் பாத்திரம்” (1 கொரி. 10:16) என்று அழைக்கப்படுகிறது. அதில் நம் பங்காக தேவனுடைய ஆசீர்வாதங்கள் யாவும், தேவன்தாமே கூட, உண்டு (சங். 16:5). ஆதாமில் நம் பங்கு தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரமாக இருந்தது (வெளி. 14:10). கிறிஸ்து நமக்காக அந்தப் பாத்திரத்தைப் பருகினார் (யோவான் 18:11), அவரது இரத்தம், நமக்காக இரட்சிப்பின் பாத்திரத்தை (சங். 116:13), நிரம்பிவழிகிற பாத்திரத்தை (சங். 23:5) கட்டியமைக்கிறது. இந்தப் பாத்திரத்தில் பங்குபெறுவதன்மூலம், கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமும் நமக்கு இருக்கிறது (1 கொரி. 10:16)” (Matthew 26:27, footnote 1).
III. கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுவதற்கான வழி, கர்த்தரைப் புசிப்பதும் குடிப்பதும் மூலமே ஆகும்—1 கொரி. 11:24-26
நாம் புசிக்கும் போது, நாம் அந்த உணவை நம் ஆள்தத்துவத்திற்குள் தன்மயமாக்குகிறோம். இதேபோல், நாம் நம் நண்பர்களிடம் பேசும்போது, ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, ஓர் உலகப்பிரகாரமான பாடலைக் கேட்கும்போது அல்லது ஒரு நாவலைப் (அகலப் புனைகதை) வாசிக்கும்போது, நாம் எண்ணங்களையும், தத்துவங்களையும், கருத்துகளையும் தன்மயமாக்குகிறோம். நாம் எதை உள்வாங்குகிறோமோ அது விரைவில் அல்லது பின்னர் நம்முடைய பகுதியாக ஆகிவிடும். நாம் உள்வாங்கும் எண்ணம், தத்துவம் அல்லது கருத்து நாம் ஒரு குறிப்பிட்ட வழியில் பகுத்தறிந்து செயல்பட நமக்கு வழிவகுக்கிறது. அது உலகத்திற்கான ஓர் அன்பையும் நமக்குள் ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் நாம், கர்த்தர் அவ்வளவு நிஜமானவராக இல்லை அல்லது கூடுகைகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன என்று புகார் கூறுகிறோம். இந்த உணர்வுகள் பெரும்பாலும், இந்தத் தவறான விஷயங்களைப் புசிப்பதன் விளைவாக உள்ளன. உலகம் வேடிக்கையானதாகவும் பரவசமானதாகவும் தோன்றலாம். எனினும், நாள் முழுவதும் மிட்டாய் சாப்பிடும் குழந்தைக்கு ஒரு போஷாக்கு-அளிக்கும் இரவு உணவைப் புசிப்பதற்கான எந்தப் பசியும் இல்லாதது போலவே, அதில் பங்குபெறுவது கர்த்தருக்கான நம் பசியைக் கெடுக்க (பாழாக்க) முடியும். ஆதியாகமத்தில், அறிவு விருட்சம் கவர்ச்சிகரமானதாக கண்ணுக்குத் தெரிந்ததால் ஏவாள் சபலப்படுத்தப்பட்டாள். எனினும், இந்த விருட்சம் அவளுக்குள் பாவத்தையும் மரணத்தையும் கொண்டு வந்தது. மறுபுறம், நாம் கர்த்தரைப் புசிக்கும்போது, கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நாம் அனுபவிக்கிறோம் (1 பேது. 2:1) அதோடு நாம் நித்திய ஜீவனை அனுபவித்துமகிழ்கிறோம். கர்த்தருடைய பந்திக் கூடுகையில், நாம் எவ்வளவு அதிகமாக நம் வாயையும், நம் இருதயத்தையும் திறக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் கர்த்தரை அனுபவித்துமகிழ்வோம். கூடுகையில் பாடவும், ஜெபிக்கவும், கர்த்தரைத் துதிக்கவும் எவ்வளவு அதிகமாக நாம் பயிற்சி செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவரில் திருப்தியடைவோம், மேலும் கர்த்தரும் திருப்தியடைவார். நாம் கர்த்தருடைய பந்தியில் பங்குபெற வரும்போது, கர்த்தர் தாம் நம்மை இரட்சிப்பதற்காக அவர் கடந்துவந்த அனைத்தையும் வெறுமனே நினைவுகூருவதில் மட்டுமே அவர் அக்கறை காட்டுவதில்லை (ஆர்வப்படுவதில்லை). கர்த்தரை நினைவுகூரும் நிஜமான நினைவுகூருதல், நாம் பரிசுத்தவான்களோடு ஒன்றுசேர்ந்து தேவனுக்கு முன்பாக அவரைப் புசிப்போம், அவரைக் குடிப்போம், அவரை அனுபவித்துமகிழ்வோம் என்பதே (உபா. 12:5-7; 14:23).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பாடம், கர்த்தருடைய பந்தியின் உட்கருத்தைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. எனினும், கர்த்தருடைய பந்தி உட்கருத்தில் மிகவும் ஐசுவரியமானதாக இருப்பதால், மிகவும் அதிகமான குறிப்புகளைக் கொண்டு அவர்களை மூழ்கடிக்காமல் இருக்க கவனம் பயிற்சிசெய்யப்பட்டாக வேண்டும். சேவிப்பவர்களாகிய மற்றவர்களுடன் ஐக்கியம் கொண்ட பிறகு, அப்பத்தைப் பற்றி ஒரு குறிப்பையும், பாத்திரத்தைப் பற்றி ஒரு குறிப்பையும் (அதாவது செய்திக்குறிப்பின் ரோம எண் இரண்டில் பேசப்பட்டுள்ள அப்பம் மற்றும் பாத்திரம் பற்றிய இரண்டு குறிப்புகளையும்) சுருக்கமாக முன்வைக்கும்படி நீங்கள் உணரக்கூடும். கர்த்தருடைய பந்தியில் தங்கள் பங்கேற்பின் மூலம், இளம் வாலிபர்கள் ஓர் அலட்சியமான (தளர்வான) வழியில் வராமல், அதற்குப் பதிலாக தெளிந்தபுத்தியாலும் (நிதானத்தாலும்) பயபக்தியாலும் நிரப்பப்படுவதற்குப் பயிற்சிசெய்யப்பட வேண்டும், மேலும் ஓர் அபாத்திரமான முறையில் (தகுதியற்ற விதத்தில்) கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுவது ஒரு தீவிரமான காரியம் என்பதை அறிந்திருக்க வேண்டும் (1 கொரி. 11:27). கர்த்தருடைய பந்தி என்பது சாட்சாத்துக் கர்த்தரால் நிறுவப்பட்ட ஒரு கூடுகை என்பதைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும் நீங்கள் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும் (1 கொரி. 11:24). இது சபையின் மிகவும் அதி முக்கியமான கூடு்கை ஆகும், இதை இளம்வாலிபர்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது. கர்த்தருடைய பந்தியைப் பற்றிய நேர்த்தியான புரிந்துகொள்ளுதல் மூலம், இளம் வாலிபர்களிடையே அதைப் பற்றிய இந்தப் பாராட்டுதலை அதிகரிக்கப்பட முடியும், மேலும் இத்தகைய ஒரு பரிசுத்தமான, உட்கருத்துவாய்ந்த, அனுபவித்துமகிழத்தக்க பந்தியில் பங்கேற்க அவர்களை உற்சாகப்படுத்துகின்றது.
சுவிசேஷ செயலாக்கம்: கர்த்தருடைய பந்தியின் அப்பமும் பாத்திரமும் முழு சுவிசேஷத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அப்பம் மற்றும் பாத்தீரத்தின் உட்கருத்தை விளக்குவதன் மூலம், அவிசுவாசிகள் கர்த்தர் நமக்காக வழங்கியிருக்கும் இந்த மாபெரும் இரட்சிப்பைப் பாராட்டுவதற்கு வழிநடத்தப்படலாம். தேவனுக்கு முன்பாக, மனிதனுக்கு இரண்டு அடிப்படைத் தேவைகள் உள்ளன என்பதை அப்பமும் பாத்திரமும் நமக்குக் காட்டுகின்றன: முதலில், பாத்திரத்தால் அடையாளப்படுத்தப்படும் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்படுவதற்கான தேவையும், இரண்டாவதாக, அப்பத்தால் சின்னமாகக் காட்டப்படுகிறபடி, அவனுக்குள் பகிர்ந்தளிக்கப்படும் தேவனுடைய சிருஷ்டிக்கப்படாத, நித்திய ஜீவனைப் பெறுவதற்கான தேவையும் ஆகும். ஒரு பாத்திரம் ஒரு பங்கைச் சுட்டிக்காட்டுகிறது. வீழ்ச்சி மற்றும் பாவத்தின் காரணமாக, மனிதன் தன் பங்காகிய தேவனை இழந்து, அதற்குப் பதிலாக தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகிறான் (மத். 25:41). மனிதனை மீட்டு, அவனைத் தன் பாவமுள்ள நிலைமையில் இருந்து சுத்திகரித்து, மீண்டும் ஒருமுறை தேவனை அவனது பங்காகக் கொள்ள அவனை அனுமதிக்கும் கிறிஸ்துவின் இரத்தத்தின் ஐக்கியத்தில் பங்கேற்பதை இந்தப் பாத்திரம் மறைவாய்க் காட்டுகிறது (1 கொரி. 10:16). அப்பம் என்பது தெய்வீக ஜீவனைக் கொண்டு மனிதனை மறுபடிஜெநிப்பிக்க வந்த ஜீவ அப்பமாகிய கர்த்தராகிய இயேசுவை அடையாளப்படுத்துகிறது (யோவான் 6:35; 10:10). எனவே,இந்த அப்பம் மற்றும் பாத்திரத்தில் பங்குகொள்வதன் மூலம் மனிதன் தேவனுடைய அற்புதமான இரட்சிப்பை அனுபவித்துமகிழ்ந்து, தெய்வீக ஜீவனில் தேவனோடு ஒன்றாக்கப்படட முடியும்.
மிக முக்கியக் காரியங்கள்: கர்த்தருடைய பந்தியைப் பாராட்டுதல் (III.F.1.).
BACKGROUND READING: Basic Lessons on Service, Lessons 2–3.
REFERENCES: Life-study of 1 Corinthians, Messages 49–50, 54–56; The Lord’s table Meeting, Outlines 1–2, 4, 6; Basic Lessons on Service, Lessons 2–3; 1 Corinthians 10:17, footnote 2; 10:18, footnote 1; 11:20, footnote 1; 11:29, footnote 3; Matthew 26:26, footnote 2; 26:27, footnote 1.