கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்
பகுதி 11
✵பாடம் 01 – 09
கிறிஸ்து: எல்லாப் பிரச்சினைகளுக்குமான ஒப்பற்ற தீர்வு
குறிக்கோள்: நம் எல்லா பிரச்சனைகளுக்குமான தீர்வாக கிறிஸ்துவை நாம் அனுபவிக்க முடியும் என்பதைக் காண்பற்கு.
பொருட்சுருக்கம்: கிறிஸ்துவே நம் பிரச்சினைகள் அனைத்திற்குமான ஒப்பற்ற தீர்வு என்பதை ஒன்று கொரிந்தியர் நமக்குக் காட்டுகிறது. கிறிஸ்துவே நம் தேவைகள் அனைத்தையும் சந்திக்க முடியக்கூடிய இந்தச் சகலத்தையும்-உள்ளடக்கியவர். கிறிஸ்துவில் பங்குகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 1 கொரிந்தியரில் உள்ள முதலாவது பிரச்சினையான பிரிவினையுடனான பவுலின் இடைபடுதல், கிறிஸ்து எவ்வாறு நம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்க முடியும் என்பதை உதாரணங்காட்டி விளக்குகிறது. பிரிவினையிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு, நாம் கிறிஸ்துவையும் அவருடைய சிலுவையையும் பிரயோகிக்க வேண்டும். நம் தினசரி வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையிலும் நாம் கர்த்தரிடம் சென்று அவரை நம் ஞானமாக, நம் வழியாக எடுத்துக்கொண்டாக வேண்டும். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தை அழைப்பதன் (கூப்பிடுவதன்) மூலம் நாம் கிறிஸ்துவை நம் தீர்வாக அனுபவிக்க முடியும், ஏனெனில் நாம் அவரைக் கூப்பிடவே தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
பின்புலம்: கொரிந்தியர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளிலிருந்து தங்களுடைய சொந்தப் பிரச்சனைகள் மிகவும் வேறுபட்டவையாக இருப்பதாக இளம்வாலிபர்கள் உணரக்கூடும். உண்மையில், இளம் வாலிபர்களுக்குத் தங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் சகாக்களுடன் இருக்கும் பிரச்சினைகளில் பல, பிரிவினையின் பிரச்சனைகளாகவே உள்ளன. அவர்கள் பாவமுள்ள நபர்களின் சங்கதிகள், விசுவாசிகளிடையே உள்ள சண்டைகள், சுயக்கட்டுப்பாடு, வேசித்தனம் மற்றும் விக்கிரகாராதனையிலிருந்து விலகியிருத்தல், பணிந்தடங்குதல், கர்த்தருடைய இராப்போஜனம், விசுவாசம் (1 கொரிந்தியரில் இடைபடுத்தப்பட்ட பிற பிரச்சினைகள்) ஆகியவற்றிற்கும் ஆளாகின்றனர் அல்லது அவற்றுடன் இடைபடுகின்றனர். எனினும், கொரிந்தியர்களின் பிரச்சினைகளுக்கும், அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அவர்கள் பார்க்காவிட்டாலும்கூட, அவர்களை எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் அவர்கள் திரும்ப வேண்டியது கிறிஸ்துவிடமே; அவர் ஓர் எப்போதும்-இருக்கும் இரட்சகர் என்பதை அவர்கள் இன்னும் பார்த்தாக வேண்டும்.
அதிகாரங்கள்: 1 கொரிந்தியர் 1–2.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
I. கிறிஸ்துவே நம் பிரச்சினைகள் அனைத்திற்குமான ஒப்பற்ற தீர்வு என்பதை ஒன்று கொரிந்தியர் நமக்குக் காட்டுகிறது— 1 கொரி. 1:9, 22–24; 2:2
கொரிந்துவிலுள்ள சபை, பவுலால் எழுப்பப்பட்டாலும், பல பிரச்சினைகளை அனுபவித்தது. இந்த நகரத்தின் பெயர் தானே சாம்ராஜ்யம் முழுவதும் அக்கிரமத்திற்கு ஒரு பழமொழியாக இருந்தது. பரிசுத்தவான்கள் பல சபலப்படுத்துதல்களால் (சோதனைகளால்) எதிர்கொள்ளப்பட்டனர் அதோடு போட்டியிடும் தத்துவங்களால் சூழப்பட்டனர். கவலைக்கிடமாக, அவர்கள் பிரிவினை உண்டாக்குகிறவர்களாக ஆனார்கள் அதோடு தங்கள் மத்தியில் கடுமையான பாவத்தையும்கூட பொறுத்துக்கொண்டார்கள். கர்த்தருடைய உயிர்த்தெழுதல் உட்பட சத்தியம் தொடர்பான பல காரியங்களில் குழப்பம் இருந்தது! கர்த்தருடைய இராப்போஜனம் ஒரு கவனக்குறைவான பாணியில் அனுசரிக்கப்பட்டது, இதில் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒருமைக்கான உணர்வு சிறிதும் இல்லை. சில சகோதரர்கள் மற்ற சகோதரர்களை நீதிமன்றத்திற்குக்கூட அழைத்துச்சென்றுக்கொண்டிருந்தனர். அத்தகைய ஒரு சூழ்நிலையில் பவுல் விசுவாசிகளுக்கு, எல்லாப் பிரச்சினைகளுக்குமான ஒப்பற்ற தீர்வாகக் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டினான். ஒவ்வொரு தேவையையும் பூர்த்திசெய்து, ஒவ்வொரு சூழ்நிலையையும் கவனித்துக்கொள்வது பார்ப்பதற்கு எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும்சரி, அதைச் செய்ய முடியக்கூடியவராகிய கிறிஸ்துவின் போதுமானத் தன்மையைக் காட்டுவதற்காக, கொரிந்துவிலுள்ள சபை தனக்கு அளித்த வாய்ப்பை பவுல் பற்றிக்கொண்டான். (எனினும், கொரிந்தியர்களை விட சிறந்தவர்களாக நம்மை நாமே கருதக்கூடாது, மாறாக அவர்களின் பிரச்சினைகள் நாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளே என்பதை உணர்ந்தறிய வேண்டும்.)
A. கிறிஸ்துவே நம் தேவைகள் அனைத்தையும் சந்திக்க முடியக்கூடிய இந்தச் சகலத்தையும்-உள்ளடக்கியவர்—1 கொரி. 1:9
கிறிஸ்து நமக்கு என்னவாக இருக்கிறார் என்பதைப் பற்றிய குறைந்தது இருபது விஷயங்களை முதல் கொரிந்தியர் குறிப்பிடுகிறது (See 1 Corinthians 1:9, footnote 2). இத்தகைய ஒரு சகலத்தையும்-உள்ளடக்கியவரே நம் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வாகவும், நம் தேவைகள் அனைத்திற்கும் விடையாகவும் இருக்கிறார். நாம் ஒரு பிரச்சினையை அல்லது ஓர் இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கும் போதெல்லாம், நம் முதல் எதிர்வினை அவரைக் கூப்பிடுவதாகவே இருக்க வேண்டும். பாவத்தை ஜெயங்கொள்ளுதல், பள்ளியில் சிறப்பாகச் செயல்படுதல், நண்பர்களைப் பெறுதல் போன்ற விஷயங்களாகிய—தேவைகள் நமக்குத் தெளிவாகத் தெரியும். கிறிஸ்துவே இந்தத் தேவைகள் அனைத்திற்கும் நம் நிரப்பீடாக இருக்கிறார். நாம் எப்போதும் அதை உணர்ந்தறியாவிட்டாலும், தேவனுடைய பொருளாட்சியில் பங்குகொள்வதே நம் மிகப்பெரிய தேவை. கிறிஸ்து நிச்சயமாகவே இதற்கும் நம் நிரப்பீடாக இருக்கிறார்! இந்தப் புத்தகத்தில் கிறிஸ்து, நாம் தேவனில் பங்குகொள்ள நமக்குத் தேவையான எல்லாமுமாக வெளிப்படுத்தப்படுகிறார். (1 கொரிந்தியர் புத்தகத்தில் கிறிஸ்துவின் பல ஐசுவரியமான உருப்படிகளைப் பார்க்க, சேவிப்பவர்கள் Life-study of 1 Corinthians, Message 5, pp. 40–43 க்கு உள்ளே நுழைய வேண்டும்.)
B. தேவன் தம்முடைய குமாரனின் ஐக்கியத்திற்குள் நம்மை அழைத்திருக்கிறார்—1 கொரி. 1:9
கொரிந்தியர்களின் எந்தவொரு பிரச்சினையோடும் இடைபடத் தொடங்குவதற்கு முன் பவுல், தேவன் தம்முடைய குமாரனின் ஐக்கியத்திற்குள் நம்மை அழைத்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டினான். எல்லாப் பிரச்சினைகளுக்குமான ஒப்பற்ற தீர்வாக கிறிஸ்துவை அவர்களுக்குக் காட்டுவதன் மூலம் பவுல் தொடங்கினான். பின்னர், புத்தகத்தின் மீதமுள்ள மற்ற பகுதிகளில் அவன், கிறிஸ்துவை தங்கள் குறிப்பிட்ட பிரச்சினைக்கு எவ்வாறு பிரயோகிப்பது என்பதை ஒவ்வொரு சங்கதியாக அவர்களுக்குக் காட்ட ஆரம்பித்தான். நாம் எந்த ஐக்கியத்திற்குள் அழைக்கப்பட்டிருக்கிறோமோ அந்த ஐக்கியம் கிறிஸ்துவில் ஒரு பங்கேற்பாகும், அதாவது தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற அபிஷேகம் செய்யப்பட்டவராகிய அவரில் பங்குபெறுவதன் மூலம் துய்க்கும் ஓர் அனுபவமகிழ்ச்சியாகும். இந்த ஐக்கியத்தில், நாம் கிறிஸ்துவின் சகல ஐசுவரியங்களிலும் பங்குபெறுகிறோம். “ஒப்பற்ற மையம் கிறிஸ்து மற்றும் கிறிஸ்து மாத்திரமே என்ற உண்மையை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவேன். இந்த ஒப்பற்ற மையமாகிய கிறிஸ்துவே காரியம். உங்கள் உள்ளூரிலுள்ள சபை நல்லதா கெட்டதா, உயர்ந்ததா தாழ்ந்ததா என்பது காரியம் அல்ல. இந்த ஒப்பற்ற மையமாகிய கிறிஸ்துவே காரியம். நாம் அனைவரும் அவருக்குள் அழைக்கப்பட்டுள்ளோம், அவரிலுள்ள ஐக்கியம், அனுபவமகிழ்ச்சி, பங்கேற்பு ஆகியவற்றிற்குள் அழைக்கப்பட்டுள்ளோம்” (Life-study of 1 Corinthians, Message 3, p. 27). நம் சபையில் உள்ள புறம்பான சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நம் ஒப்பற்ற மையமாகிய கிறிஸ்துவிடம் நாம் அவரை அனுபவித்துமகிழ்வதற்கு வர வேண்டும். கிறிஸ்துவை துய்க்கும் நம் அனுபவமகிழ்ச்சி, சபை வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு சூழ்நிலையையும் கவனித்துக்கொள்ளும்.
II. இந்தப் புத்தகத்தில் இடைபடுத்தப்பட்ட முதலாவது பிரச்சினையான பிரிவினையுடனான பவுலின் இடைபடுதல், கிறிஸ்து எவ்வாறு நம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்க முடியும் என்பதை உதாரணங்காட்டி விளக்குகிறது— 1 கொரி. 1:10-31
கொரிந்தியர்களுக்கு எழுதிய தன் முதல் நிருபத்தில் பவுல் இடைபடும் முதல் விஷயம், பிரிவினை பற்றிய விஷயமே. பிரிவினைதான் ஒருவேளை, எந்தவொரு சபையும் எதிர்கொள்ள முடியக்கூடிய மிகக் கடுமையான பிரச்சினையாக இருக்கிறது. எனவே, எந்தவொரு பிரச்சினைக்கும் எவ்வாறு கிறிஸ்து தீர்வாகப் பிரயோகிக்கப்பட முடியும் என்பதைப் பார்ப்பது ஒரு நல்ல “சோதனை சங்கதி (வழக்கு).” இந்தப் பாடத்தில் நாம், கிறிஸ்துவை ஒரு பிரச்சனைக்கு எவ்வாறு பிரயோகிப்பது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாகப் பிரிவினையைப் பார்ப்போம். பவுல் 1 கொரிந்தியர் 1:10-ல் பிரிவினையை எடுத்துரைக்கும் முன், அவன் வசனம் 9-ல் நாம் எவ்வாறு தேவனுடைய குமாரனின் ஐக்கியத்திற்குள் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் பற்றி பேசுகிறான். “இப்படிப்பட்ட ஒருவரின் ஐக்கியத்திற்குள்தான் நாம் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய குமாரனின் இந்த ஐக்கியமானது, சபையாகிய அவரது சரீரத்தில் விசுவாசிகளுடன் (அப். 2:42; 1 யோ. 1:3) அப்போஸ்தலர்கள் பகிர்ந்துகொண்ட ஐக்கியமாக ஆயிற்று, அதோடு இந்த ஐக்கியம்தான் நாம் அனுபவித்துமகிழ்கிற ஐக்கியமாக இருக்க வேண்டும்… ஆவியானவரால் எடுத்துச்செல்லப்படுகிற இப்படிப்பட்ட ஓர் ஐக்கியம் (2 கொரி. 13:14), அவர் ஒப்பற்றவராக இருப்பதால் ஒப்பற்றதாக இருக்க வேண்டும்; இது அவரது ஒப்பற்ற சரீரத்தின் அவயவங்கள் மத்தியில் எந்தப் பிரிவினையையும் தடுக்கிறது” (1 Corinthians 1:9, footnote 2).
A. பிரிவினையே சபை வாழ்க்கையில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு வேராக இருக்கிறது—1 கொரி. 1:10
“இந்த நிருபத்தில் அப்போஸ்தன், கொரிந்துவிலுள்ள விசுவாசிகள் மத்தியிலுள்ள பதினொரு பிரச்சினைகளுடன் இடைபட்டான். அவற்றுள் முதலாவதாக இருந்தது, பிரிவினை என்ற காரியம். பிரிவினையே ஏறக்குறைய எப்போதும் தலையாய பிரச்சினையாகும், இது விசுவாசிகள் மத்தியில் மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் கொண்டுவருகிறது. விசுவாசிகளிடையே உள்ள பிரச்சினைகளுக்கு இதுவே வேராகக் கருதப்படலாம்” (1 Corinthians 1:10, footnote 3). நீங்கள் கிறிஸ்தவ வரலாற்றைப் பார்த்தால், கர்த்தருடைய ஒவ்வொரு நகர்வும் இறுதியில் பிரிவினையால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இன்று இத்தனை அதிகமான ஸ்தாபனங்கள் உள்ளன! கர்த்தருடைய மக்கள் இனம், கலாச்சாரம், சமூக அந்தஸ்து, தத்துவம் மற்றும் பல்வேறு அபிப்பிராயங்களால் பிரிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரிப்பது ஒரு மிகத் தீவிரமான காரியம். கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் கூட, பிரிவினையின் வடிவங்களாகிய மன்னிக்கப்படாத புண்படுத்துதல்கள் மற்றும் நிறைவேறாத லட்சியங்கள் காரணமாக கடந்த எண்பது ஆண்டுகளில் நாம் பல “புயல்களால்” பாதிக்கப்பட்டுள்ளோம். “சுபாவத்தின்படி, நாம் அனைவரும் பிரிவினை உண்டாக்குகிறவர்கள். நாம் ஒரு பிரிவினை உண்டாக்கும் மூலக்கூறுடன் பிறந்தோம்” (Life- study of 1 Corinthians, Message 6, p. 57). நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகள் பிறருடன் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகின்றன. மற்றவர்களால் புண்படுத்தப்படுவது எவ்வளவு எளிது என்பதைக் கவனியுங்கள். நாம் மொழி, கலாச்சாரம், ஆளுமை, சமூக அந்தஸ்து போன்றவற்றில் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவர்கள். நாம் யாருடன் இருக்க விரும்புகிறோம் என்பதில் நம் விருப்பங்கள் வெளிக்காட்டப்படுகின்றன. நம் விருப்பங்களை தன்னலக்குழுவைச் சார்ந்த குறுகிய குழு நல மனப்பான்மையுள்ளத் தன்மையில் வெளிக்காட்டப்படக்கூடும், இது கிறிஸ்துவின் சரீரத்தைச் சேதப்படுத்தும்! இன்று உலகம் பன்முகத்தன்மை மற்றும் பன்முக கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது, இது ஒருவரோடொருவர் ஒத்துப்போகுவதற்குப் பதிலாக, தங்கள் வேறுபாடுகளை வெளிக்காட்டும்படி மக்களை உற்சாகப்படுத்துகிறது. எனினும், வேதாகமம், “தேவன்…சரீரத்தை ஒன்றுசேர்த்து இழைந்திணைத்திருக்கிறார்” (1 கொரி. 12:24). விஷயங்களைப் பற்றிய நம் அபிப்பிராயங்கள், பிறரைப் பற்றிய நம் விமர்சனம், நம் எதிர்மறையான பேச்சு, நம் புகார்செய்தல் ஆகியவையும் பிரிவினையின் வடிவங்களாகும். இளம் வாலிபர்கள் பலர் தங்களுக்கு மேல் அதிகாரத்தில் உள்ளவர்களாகிய—பெற்றோர், ஆசிரியர்கள், சேவிப்பவர்கள் போன்றவர்கள் பற்றி புகார் கூறுகிறார்கள். அவர்களுக்கு இந்தச் சேவிப்பவர்களைப் பற்றிய அபிப்பிராயங்களும், தங்கள் பெற்றோரைப் பற்றிய அபிப்பிராயங்களும் உள்ளன. நீங்கள் எப்படி? உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய ஏற்பாட்டில் நீங்கள் அதிருப்தியடைந்திருக்கிறீர்களா? நீங்கள் தேவனுடைய சித்தத்தை ஏற்கவில்லை எனில், உங்களுக்கு சிலுவை தேவை!
B. பிரிவினையிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு, நாம் கிறிஸ்துவையும் அவருடைய சிலுவையையும் பிரயோகிக்க வேண்டும்—1 கொரி. 1:13, 17-18, 23-24
விசுவாசிகளாக, நாம் கவனம் செலுத்தியாக வேண்டிய முதல் விஷயம், ஆவியானவரின் ஒருமையைக் காத்துக்கொள்வதே ஆகும் (எபே. 4:3). கிறிஸ்துவையும் அவருடைய சிலுவையையும் பிரயோகிப்பதன் மூலம் மட்டுமே, நாம் இந்த ஒருமையைக் காத்துக்கொள்ள முடியும். ஜீவனில் வளர்ச்சியின்மையின் விளைவாக வரும் அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துவேறுபாடுகள் காரணமாக பிரிவினை உள்ளே நுழைகிறது. கொரிந்திய விசுவாசிகள், பல விஷயங்களைக் குறித்து வாதிட்டு சண்டையிடும் சிறு பிள்ளைகளைப் போன்று இருந்தனர். அவர்கள் கிறிஸ்துவை, குறிப்பாக சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அனுபவிக்க வேண்டியிருந்தது. நம் மாம்சமும் நம் மாம்சீகமான ஆத்தும-ஜீவனும், அதன் அபிப்பிராயங்கள் அனைத்தும் உட்பட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வோர் எதிர்மறையான பிரச்சினையோடும் கர்த்தருடைய சிலுவை இடைபட்டுள்ளது. கிறிஸ்துவையும் அவருடைய சிலுவையையும் பிரயோகிப்பது என்றால், நாம் நம் பற்களைக் கடித்துக்கொண்டு, மற்றவர்களைப் பொறுத்துக்கொள்கிறோம் என்பது அர்த்தமல்ல. மாறாக, கிறிஸ்து நம் நிரப்பீடாகவும், தம் சிலுவையின் வீரியமாகவும் இன்று ஆவியானவரில் உள்ளனர். சிலுவையைப் பிரயோகித்தல் என்பது கர்த்தரிடம் திரும்புவதாலும், அவருக்குத் திறந்துக்கொடுப்பதாலும் நடக்கிறது. உங்கள் பெற்றோர் உங்களைப் புரிந்து கொள்ளாதபோது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் பெற்றோரைப் பற்றி நீங்கள் புகார் (குறை) கூறினால், நீங்கள் பிரிவினையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தேவை? நீங்கள் கர்த்தரிடம் சென்று, அவரிடம் ஜெபிப்பதே உங்களுக்குத் தேவை. நம் அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. நம் அனைவருக்கும் அபிப்பிராயங்கள் உள்ளன. நம்மீது அதிகாரம் உள்ளவர்களுடன் நாம் கருத்து வேறுபாடு கொள்ளும் (உடன்படாத) நேரங்கள் நம் அனைவருக்கும் உண்டு. எனினும், கர்த்தருக்குத் திறந்துக்கொடுப்பதன் மூலம், நாம் தேவனுடைய ஏற்பாட்டைப் பெறலாம் மேலும் அவர் ஏற்பாடு செய்திருக்கும் சூழ்நிலையில் சமாதானமாக இருக்க முடியும். வெறுமனே அவரிடம் செல்லுங்கள். உங்களால் அதைச் சாதிக்க முடியாது என்று கர்த்தரிடம் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் சூழ்நிலைக்கு அவரிடமிருந்து கிருபையைப் பெறலாம். நாம் நம் ஆவிக்குத் திரும்பி, கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம் அவரை அனுபவித்து மகிழும்போதெல்லாம், கிறிஸ்துவும் அவருடைய சிலுவையும் நமக்குப் பிரயோகிக்கப்படுகின்றன. நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், நாம் அவருக்குள் ஞானஸ்நானம் பெற்றுள்ளோம் என்பதையும், நாம் அவருடன் ஒரு ஜீவாதார சேர்க்கையில் இருக்கிறோம் என்பதையும் நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். நாம் வேறு எந்த நபரையும் பற்றிக்கொள்ளாமல், நமக்காகச் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே, நம் உரிமையாளராகிய கிறிஸ்துவையே பற்றிக்கொள்ள வேண்டும். “நாம் இந்தச் சிலுவையை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவை அனுபவித்துமகிழ வேண்டும். இதுவே சபையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்குமான ஒப்பற்ற தீர்வு” (Life-study of 1 Corinthians, Message 5, p. 48).
III. கிறிஸ்துவே ஒரு பரமஇரகசியத்தில் உள்ள தேவஞானமாகவும், தேவனுடைய ஆழமான விஷயங்களாகவும் (ஆழங்களாகவும்), நம்முடைய எல்லா பிரச்சனைகளோடும் இடைபடுவதற்கான நம் வழியாகவும் இருக்கிறார்—1 கொரி. 1:24; 2:6-10
A. உலகத்தின் தாழ்குடியில் பிறந்தவர்களைக் கிறிஸ்துவுக்குள் இடமாற்றம் செய்யும்படி தேவன் அவர்களை தெரிந்துக்கொண்டார்—1 கொரி. 1:26-31
நாம் கிறிஸ்துவுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளோம்! ஒரு காலத்தில் உலகத்தில் தாழ்குடியில் பிறந்தவர்களாகவும், முட்டாள்களாகவும் இருந்த நாம் இப்போது கிறிஸ்துவில் உயர்குடியைச் (மேதகு) சேர்ந்தவர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கிறோம். அவரில் நாம், ஒரு புதிய சிருஷ்டிப்பாக இருக்க மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம் (2 கொரி. 5:17). நம் பரலோக பிறப்புச் சான்றிதழில், ராஜாதி ராஜா மற்றும் கர்த்தாதி கர்த்தரின் பிள்ளைகள் என்ற நம் அரச அந்தஸ்தைச் சாற்றுகிறது, இது தேவதூதர்களை விட கூட உயர்ந்தது. மற்றவர்களின் புகழைக் கண்டு பொறாமைக் கொள்வது முட்டாள்தனம். உலகம் ஞானியாகவும், நற்குடியில் பிறந்ததாகவும் கருதுவதை, தேவன் தம் பொருளாட்சியில் அவமாக்கியிருக்கிறார். தேவன் இந்த உலகத்தின் முட்டாள்களையும் பலவீனமானவர்களையும் தெரிந்துக்கொண்டார், ஆனால் ஞானிகளையும் பலமுள்ளவர்களையும் (பலவான்களையும்) நிராகரித்தார் (1 கொரி. 1:27). முட்டாள்களாகவும், தாழ்குடியில் பிறந்தவர்களாகவும், பலவீனர்களாகவும் உங்களையே நீங்கள் கருதுகிறீர்களா? உள்ளுக்குள் ஆழத்தில், நாம் அரிதாகவே அவ்வாறு உணர்கிறோம். (எவ்வளவு எளிதாக நாம் மற்றவர்களை இழிவாகக் கருதி, அவர்களைக் கேலி செய்கிறோம்.) முட்டாள்களையும், தாழ்குடியில் பிறந்தவர்களையும், பலவீனர்களையும் தெரிந்துக்கொள்ளுவதன் மூலம் தேவன் ஞானமுள்ளவர்களும், நற்குடியில் பிறந்தவர்களையும், பலமுள்ளவர்களையும் (பலவான்களையும்) வெட்கப்படுத்தினார். அவருடைய விருப்பத்தேர்வு நம்முடைய விருப்பத்தேர்வுக்கு மாறாக இருந்தது. மனிதர்கள் எதைக் கனப்படுத்துகிறார்களோ, அதை தேவன் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுமில்லாமையாக எண்ணிவிட்டார். பள்ளியில் “பிரசித்திப்பெற்ற கூட்டத்தில்” ஒரு பகுதியாக இருக்க, பிரபலமாக இருக்க முயலாதீர்கள். ஞானிகளையும், நற்குடியில் பிறந்தவர்களையும், சக்தி வாய்ந்தவர்களையும் பாராட்டுவது என்பது தேவன் தெரிந்துக்கொள்வதை புறக்கணிப்பதாகும். உலகத்தின் பார்வையில் உயர்குடியைச் (மேதகு) சார்ந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் (பலவான்களாகவும்) அல்லது நற்குடியில் பிறந்தவர்களாகவும் இருக்க நாடுவது என்பது தேவன் நிராகரிப்பதை நாடுவதாகும். பிரபலமாக இருப்பது, கிறிஸ்துவுடன் பொருந்தாதது ஆகும். கர்த்தர் பூமியில் இருந்தபோது, அவர் மனிதர்களால் இழிவாகக் கருதப்பட்டு, நிராகரிக்கப்பட்டார்.
B. கிறிஸ்து தேவனிடமிருந்து நமக்கு ஞானம் ஆனார், நீதியும் பரிசுத்தமும் மீட்பும் ஆனார்—1 கொரி. 1:30-31
ஒரு கடினமான பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண ஞானம் தேவை. நாம் பாவத்தில் விழுந்துபோய், அநீதியுள்ளவர்களாகவும், பரிசுத்தமற்றவர்களாகவும், தேவனுடைய மகிமைக்கு மிகக் குறைவானவர்களாகவும் இருந்ததில் நமக்கு ஒரு கடுமையான பிரச்சினை இருந்தது. நம் இரட்சகராக இருக்க கிறிஸ்துவை நாம் எடுத்துக் கொண்டபோது, நாம் அவரை நம் ஞானமாக எடுத்துக்கொண்டோம். நம் சொந்த ஞானம் நம்மை நீதியுள்ளவர்களாகவும் அல்லது பரிசுத்தமுள்ளவர்களாகவும் ஆக்கவில்லை, அது நமக்கு எந்த மகிமையையும் ஆதாயம்பண்ணவும் இல்லை, ஆனால் கிறிஸ்துவே நம் ஞானமாக ஆனார்: அவரே நம் நீதியாகவும், பரிசுத்தமாகவும், மீட்பாகவும் ஆனார். நீதி என்பது நம் நீதிப்படுத்துதலுக்காக நமக்குப் பிரயோகிக்கப்படும் கிறிஸ்துவே. இது நம் கடந்த காலத்தை. கவனித்துக் கொள்கிறது. கிறிஸ்து நம் நீதியாக ஆகுவதன் மூலமாக நாம் தேவனால் நம் ஆவியில் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம் (ரோ. 5:18.) பரிசுத்தமாக்குதல் என்பது நிகழ்காலத்திற்கானது. இன்று நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் கிறிஸ்து நம் ஆத்துமாவில் நம்மைப் பரிசுத்தமாக்குகின்றார், நம் மனம், உணர்ச்சி மற்றும் சித்தத்தில் நம்மை மறுசாயலாக்குகின்றார். மீட்பு என்பது நம் எதிர்காலத்திற்கானது, இது கிறிஸ்து தம்முடைய ஜெய்வீக ஜீவனைக் கொண்டு நம்முடைய சரீரத்தை தம்முடைய மகிமையான ரூபமாக (ரோ. 8:23) மீட்க (அல்லது உருமாற்ற) போகும் போது உள்ளது (பிலி. 3:21).
C. நம்முடைய எல்லா பிரச்சினைகளோடும் இடைபடுவதற்கான நம் ஞானமாகக் கிறிஸ்துவை நாம் எடுத்துக்கொள்ள முடியும்—1 கொரி. .1:30-31
நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, நாம் நம்முடைய சொந்த வழிகளில் ஞானிகளாக இருந்தோம். நாம் நம்முடைய சொந்த ஞானத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தோம் மற்றும் நம் சூழ்நிலைகளை தீர்மானித்தோம். நாம் இரட்சிக்கப்பட்டபோது, தேவனிடமிருந்து நிஜமான ஞானமாக இருப்பதற்கான கிறிஸ்துவை நாம் பெற்றோம். ஞானம் என்றால் என்ன? ஞானம் என்பது விஷயங்களைச் செய்வதற்கான ஒரு வழியாகும். கிறிஸ்துவே, விஷயங்களைச் செய்வதற்கான தேவனுடைய வழி (யோவான் 14:6), மேலும் நாம் விஷயங்களைச் செய்வதற்கான நம் வழியாக அவரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினை இருக்கும்போது ஞானம் குறிப்பாக தேவைப்படுகிறது. இளம்வாலிபர்கள் தங்ககளுக்கு இன்னும் ஞானம் இல்லை என்பதால் அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று அடிக்கடி உணர்கிறார்கள். இது நல்லது, ஏனெனில் கிறிஸ்துவை ஞானமாக அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பை இது நமக்கு அளிக்கிறது. நம் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் இடைபடுவதில் நம் அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளில் கிறிஸ்துவே நமக்கு நம்முடைய ஞானமாக இருக்க முடியும். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் நாம் கர்த்தரிடம் திரும்புவதற்கும், நம் பிரச்சினைகளைப் பற்றி அவரிடம் கூறுவதற்கும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்பதற்குமான நல்ல வாய்ப்புகளாக உள்ளன. இந்தச் சூழ்நிலைகளோடு இடைபட நம்மில் வளரவும், நம் கிருபையாக இருக்கவும்கூட நாம் அவரிடம் கேட்டுக்கொள்ளலாம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் நமக்கு ஒரு சவாலாக இருக்கிறது. சில சூழ்நிலைகள் சாத்தியமற்றதாகக் கூட தோன்றும். நம்மால் சமாளிக்க முடியாது என்று நாம் உணரக்கூடும். ஒவ்வொரு பிரச்சினையையும், ஒவ்வொரு புதிய சூழ்நிலையையும் சமாளிப்பதற்கான நம் வழி, கர்த்தரிடம் சென்று நம் இருதயங்களை அவரிடம் ஊற்றிவிடுவதே ஆகும். அவர் நம்மைக் குறித்து அக்கறை கொள்கிறார் (1 பேது. 5:7). தேவனுடைய இலக்கு, நாம் நித்தியத்திற்கும் அவரை வெளிக்காட்ட, நாம் அவருடைய சாயலாக மறுசாயலாக்கப்பட வேண்டும் என்பது நமக்குத் தெரியும். தேவனுடைய குறிக்கோள் நம்மில் நிறைவேறுவதைக் காண, நாம் எப்படிதான் அந்த நிலைக்கு வரப் போகின்றோம்? தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதைப் பற்றி கவலைப்படக் கூட வேண்டாம்—வெறுமனே கிறிஸ்துவை எடுத்துக்கொள்ளுங்கள்!
D. கிறிஸ்துவின் நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம், எல்லா பிரச்சனைகளுக்குமான இந்த ஒப்பற்ற தீர்வாக கிறிஸ்துவை நாம் அனுபவிக்க முடியும்—1 கொரி. 1:2
நாம் எவ்வளவு அதிகமாக கர்த்தரை அனுபவித்துமகிழ்கிறோமோ அதோடு நாம் எவ்வளவு அதிகமாக அவரை நோக்கிக் கூப்பிடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக அவர் ஜீவன்-தரும் ஆவியானவராக நமக்குப் பிரயோகிக்கப்படுகிறார், மேலும் அவ்வளவு அதிகமாக நாம் ஜீவனில் வளர்கிறோம். சபை வாழ்க்கையிலோ அல்லது நம் தினசரி வாழ்விலோ நாம் என்ன பிரச்சினைகளை சந்தித்தாலும்சரி, வெறுமனே கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதே அதி எளிய தீர்வு. நாம் எவ்வளவு அதிகமாக அவரைக் கூப்பிடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் வளர்கிறோம், மேலும் எவ்வளவு அதிகமாக நாம் வளர்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் பிரச்சினைகள் மறைந்துவிடும். “எவ்வாறு நாம் இந்த ஐக்கியத்தை அனுபவித்துமகிழ முடியும் என்று ஒருவேளை நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். வெறுமனே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம் நாம் அதை அனுபவித்துமகிழ முடியும்….[நாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைக் கூப்பிடவே தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம் நாம் அவருடைய ஐக்கியத்தை அனுபவித்துமகிழ்ந்து, அதில் பங்கேற்கிறோம். எவ்வளவு அற்புதமானது! கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைக் கூப்பிடக் கற்றுக்கொள்ளும்படி எல்லாப் பரிசுத்தவான்களையும் நான் தூண்டுகிறேன்” (Life-study of 1 Corinthians, Message 4, p. 33).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இளம்வாலிபர்கள் தங்கள் பிரச்சினைகளோடு இடைபட கடந்த காலத்தில் முயற்சித்திருக்கும் சில வழிகளைப் பட்டியலிடும்படி அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் தங்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களைப் பொறுத்துக்கொள்ள முயற்சிப்பதன் மூலமோ தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதையும், பல சமயங்களில் இந்த வகையான தீர்வுகள் பிரச்சினையை மோசமாக்க அல்லது பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்க மட்டுமே செய்கின்றன என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் கர்த்தரிடம் திரும்பி, உள்ளுக்குள் ஆழத்திலிருந்து அவருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிட வேண்டும். (இதற்குக் கர்த்தரைச் சத்தமாகக் கூப்பிட வேண்டும் என்பது அவசியம் அர்த்தம் அல்ல.) உள்ளுக்குள் ஆழத்திலிருந்து கர்த்தரைக் கூப்பிட தங்கள் ஆள்தத்து0வத்தைத் திறப்பதே, தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து, தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியக்கூடிய ஒரே ஒருவரை ஆழமாகப் பருகுவதாகும். இத்தகைய ஓர் ஆழமான, தூய்மையான வழியில் அவர்கள் கரத்தரைத் தொடுகையில், இந்தப் பிரச்சினை என்னவாக இருந்தாலும்சரி அதில் அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் (அப்பாவி) அல்ல என்பதை அவர்களுக்குக் காட்டுவதற்கான இந்த ஒளி ஒரு குறிப்பிட்ட வழியில் வரக்கூடும். இந்த ஒளி விலையேறப்பெற்றது என்பதைக் காண அவர்களுக்கு உதவுங்கள், ஏனெனில் இந்த ஒளி ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசு, தங்களுடைய எல்லா பிரச்சினைகளுக்குமான ஒப்பற்ற தீர்வாக இந்த ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசு தங்களுக்காக அக்கறைப்பட்டு, இப்போது தங்கள் சூழ்நிலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதற்கு இந்த ஒளியே சான்றாகும். இந்த ஒளி இவ்விதமாய் வரும்போது, அவர்கள் அதற்குக் கீழ்ப்படிய வெறுமனே பயிற்சிசெய்ய வேண்டும். இது இழந்த, உடைந்த அல்லது திருடப்பட்ட ஒன்றை இடமாற்றுவதைக் குறிக்கக்கூடும்; அல்லது மற்றவர்களிடம் உண்மையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அது அவர்களிடம் வெறுமனே கோரக்கூடும். அவர்கள் தங்களைப் பொறுத்தவரை, தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக சரியாக இருப்பதற்குத் தங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறார்கள் என்று இந்த வழியில் அவர்கள் சமாதானமாக இருக்க முடியும் (அப். 24:16). கர்த்தரைக் கூப்பிடுவது, மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்பது ஆகியவையே சிலுவையை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவை தங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் ஒப்பற்ற தீர்வாக அனுபவிப்பதற்கான இரண்டு நடைமுறைக்குரிய வழிகள்.
சுவிசேஷ செயலாக்கம்: மனிதர்கள் பிரச்சினைகள் நிறைந்தவர்கள். நமக்கு நம் குடும்பம், சக ஊழியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி பிரச்சினைகள் உள்ளன. ஒருவர் மற்றொருவரின் வேறுபாடுகள் மற்றும் குறைபாடுகளைப் பொறுத்துக்கொள்வதற்குப் பெருமுயற்சி செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது வெறுமனே பலனளிக்காது என்பதை நம் அனுபவம் நமக்குக் காட்டுகிறது. நாம் எந்த மண்டலத்தைப் (துறையைப்) பார்த்தாலும்சரி, இதுவே உண்மை. மனிதர்களுக்கிடையில் அல்லது தேசங்களுக்கிடையில், உலகம் சண்டை, ஏமாற்றுதல், கொலை, போர்கள் மற்றும் இதுபோன்ற பிற மோதல்களால் நிரம்பியுள்ளது, அவை ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவே கடந்த காலத்தில் சங்கதியாக இருந்து வந்திருக்கிறது, தற்போது நிகழ்காலத்தில் சங்கதியாக இருக்கிறது, எதிர்காலத்திலும் சங்கதியாக இருப்பதற்குத் தொடரும். வீழுந்துபோன மனிதர்களிடையே, நீடிக்கும் சமாதானத்தை அடைவது நம்பிக்கையற்றது. (இரண்டு உலகப் போர்கள் மற்றும் எண்ணற்ற பிற யுத்தங்களும், மோதல்களும், போர்களும் இதற்கு வலுவான நிரூபணமாக உள்ளன. இன்று, பிறர் மீதான அடிப்படை அவநம்பிக்கை மற்றும் கோபத்தால் தூண்டப்பட்டு, மனிதகுலம் பேரழிவுக்குரிய பாழாக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்கியுள்ளது, இவை பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் பலமுறை அழிக்கப் போதுமானது.) இது ஏனெனில், மாம்சத்தில் தங்கள் இயற்கையான பிறப்பால், மனிதர்கள் பிசாசின் பிள்ளைகளாக உள்ளனர், அவர்கள் தங்கள் தீய பிதாவின் ஆசைகளைச் செய்ய விரும்புகின்றார்கள், இவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாக இருந்தான், மேலும் சத்தியம் அவனில் சத்தியம் காணப்பட முடியாது (யோவான் 8:44). இத்தகைய ஒரு பிரச்சனையானது மாம்சத்தில் நம் இயற்கையான பிறப்பால் பெறப்பட்டதால், நமக்கு ஒரு புதிய பிறப்பு, அதாவது நாம் தேவனுடைய ஆவியானவரால் பிறக்கும் ஒரு பிறப்பு தேவை (யோவான் 3:6). ஆவியானவரால் பிறப்பதென்றால், நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்குமான ஒப்பற்ற தீர்வாகக் கர்த்தராகிய இயேசுவின் தெய்வீக, ஜெயங்கொள்ளும் ஜீவனைப் பெறுவதாகும். இந்த வெற்றிகரமான, பிரச்சினைத்-தீர்க்கும் ஜீவன் குமாரனில் மட்டுமே காணப்படுகிறது. “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்…” (1 யோ. 5:12). அவர் உங்கள் ஜீவனாக இருக்க வந்துள்ளார். அவருடைய நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம் அவரைப் பெற்றுக்கொண்டு, தேவனோடும் மனிதனோடும் உள்ள ஓர் இசைவிற்குள் இரட்சிக்கப்படுங்கள் (ரோ. 10:13).
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).; கர்த்தரைக் கூப்பிடுதல் (III.E.5.).
BACKGROUND READING: Life-study of 1 Corinthians, Messages 6, 13.
REFERENCES: Life-study of 1 Corinthians, Messages 1–9, 13, 16, 18–21; 1 Corinthians 1:2, footnotes7–9; 1:9, footnote 2; 1:30, footnote 2; 2:9, footnote 3; 2:10, footnotes 1, 3.